எத்தனை நாள் காத்திருப்பு. முரட்டு comeback கொடுத்த மோகன். குஷ்பூ ஹீரோயின். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வெள்ளிவிழா நாயகன் மோகன் படங்கள் என்றாலே பாடலுக்கென்று ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். மெல்லிசைகளில் தென்றலாய் வீசியவர் என்பதை மறுக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் இளையதலைமுறைக்கு ஏற்ற பாடலிலும் இப்படி ஜொலிக்க இருக்கிறார் எனும் போதே காட்சிகள் மனதில் நிழலாடுகின்றன.
நிச்சயமாக படத்தின் டைட்டில் பாடலாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இயல்பான மோகன் அவர்களை ஆக்சன் ஹீரோவாக மாற்றியுள்ளார் இயக்குனர் விஜய்ஸ்ரீ. தென்றலாய் வருடியவருக்கு புயலாக இசை அமைத்து அதிரடியில் ஆட்டம் போட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியாண்டர் லீ. முன்பு இருந்தது போல இப்போதும் இந்த மூவர் கூட்டணி சாதிக்கட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.
சில பாடல்களைக் கேட்கும்போது நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுத்துக்கொண்டே வேலைகள் செய்வோம். அந்த வரிசையில் இந்த பாடலும் இந்தப் படமும் நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறோம்.
நடிகர் மோகனின் இன்றைய trend பாடல்களில் இதுவும் புதுமை. அவரின் 80 பாடல் வரிசைகளில் இருந்து சற்றே விலகி இந்த பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை வெளிப்படுத்தும். இசை மிரள வைக்கிறது. மோகன் சாரின் 80 பாடல்களில் இனிமை, 2022 மோகனின் ஹரா திரைப்படத்தில் இப்பாடலில் இன்று புதுமை. நிறைய பழைய ஆட்கள் முரட்டு comeback கொடுப்பது போல, இந்த படம் மூலம் வெள்ளி விழா நாயகன் மீண்டும் அவருக்கான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Video: