கடைசி நிமிடத்தில் கூட சினிமா கை கொடுக்கல பாவம். வெண்ணிலா கபடி குழு நடிகர் காலமானார். முழு விவரம்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் ஹரி வைரவன் காலமானார்; கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு.
#வெண்ணிலாகபடிகுழு , #நான்மகான்அல்ல , #குள்ளநரி_கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹரி வைரவன், இன்று (3.12.2022) காலை 12.15 மணியளவில் மரணம் அடைந்தார். மதுரை மாவட்டம் கடச்சனேந்தலில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது.
நடிகர் போண்டா மணிக்கு உதவியது போல யாரும் உதவி இருந்தா காப்பாற்றி இருக்கலாம்… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இது தான் சினிமாவின் மற்றொரு முகம். தமிழ் யின்மாவில் நாம் ஜெயித்தவர்களை மட்டும் தான் பார்க்கிறோம், ஐவரும் சில நல்ல படங்களில் நடிச்சிருக்காரு ஆனால் பாருங்க கடைசியில் யாருமே உதவிக்கு வரல, அவர் உடல்நிலை கூட மோசமாக இருந்திருக்கலாம்.
நாம் விஜய், ரஜினி, அஜித், கமல் மற்றும் முன்னை நடிகர்களை மட்டுமே பார்க்கிறோம். சைடு கதாபாத்திரங்களில் நடித்தவர்களை கண்டுகொள்வதில்லை. ரஜினியை விட விஜய் சம்பளம் அதிகமா, விஜய்யை விட அஜித்துக்கு சம்பளம் அதிகமா என்று இணையத்தில் சண்டை போடுகிறோம், ஆனால் இப்படியும் சிலர் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறோம்.
தமிழ் சினிமாவில் ஜெயித்தவர்கள் என்று எண்ணி பார்த்தால் கைவிட்டு எண்ணி விடலாம் ஆனால் தோற்றவர்களை விரல் விட்டு கூட என்ன முடியாது, காரணம் நிறைய பேர். ஒரு சிலர் நமக்கு சினிமா வாழ்க்கை கொடுக்கவில்லை என்று புரிந்து திரும்பி போயிடறாங்க, ஒரு சிலர் போராடுறாங்க, ஒரு சிலர் இது போல ஆகிவிடுகிறது.