ஹரிப்ரியா செம்ம அழகு. கேமரா எல்லாம் அவங்கள தான் போகஸ் பண்ணுது. நான் மிருகமாய் மாற லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கடைசியாக 2010ல் action கிங் அர்ஜூனுடன் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்திருக்கிறார் இவர். நிறைய படங்கள் நடித்தாலும் அவருக்கு ஒரு பிரேக் கொடுத்தது 2019ம் ஆண்டு காந்தாரா ஹீரோ நடிப்பில் வெளிவந்த பெல் பட்டம் படம் தான். இதைப்பார்த்து தான் இயக்குனர் மீண்டும் தமிழுக்கு இவங்களை அழைத்து வந்திருக்கிறார்.
நடிகை ஹரிப்ரியா பேசும்போது, மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குனர் சத்திய சிவா, எனது கன்னட திரைப்படமான பெல் பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார். கதை மிகவும் பிடித்து போக உடனே சம்மதித்தேன். இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது என்று பேசியுள்ளார். இவரின் கதாபாத்திரம் பெயர் ஆனந்தி.
ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் சாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருப்பதாக கூறினார்கள். எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன். உங்களின் இந்த புதிய முயற்சி தேடல் தான் மீண்டும் உங்களை தமிழ் சினிமா அழைத்து வந்திருக்கிறது. உங்களது செகண்ட் இன்னிங்ஸ்க்கு ஒரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நான் மிருகமாய் மாற படம் இன்று திரையரங்கில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. தலைப்பு போலயே படமும் ரொம்ப brutal-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ராந்த் வேற இந்த படத்தில் வில்லனாக பண்ணியுள்ளார். அதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். இந்த படம் அவருக்கும் ஒரு பிரேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Video: