கெளதம் மேனன் - கீர்த்தி சுரேஷ் முரட்டு குத்து குத்துறாங்க.. ஹாரிஸ் மாம்ஸ் வேற.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி. ஹாரிஸ் 3.0 அந்த நிகழ்ச்சியின் பெயர். ரொம்ப நல்லா போச்சு போல. எப்போமே ஹாரிஸ் ஒரு concert பண்றாங்க என்றாலே கூட்டம் செம்மயா அள்ளும், அதுவும் அவர் போட்ட மெலடி எல்லாம் இப்போ நெனச்சா கூட எந்தவொரு இசையமைப்பாளராலும் போட முடியாது.
சமீபத்தில் நடந்த ராகும் கான்செர்ட்ல ஏகப்பட்ட பிரச்சனை அதனால் சென்னையில் இனிமேல் கான்செர்ட் எல்லாம் நடக்காது என்று நெனச்சுட்டு இருந்தோம், ஆனால் இவர் கான்செர்ட் அறிவிப்பு வந்தவுடனே எல்லாரும் புக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அது தான் மற்ற சிட்டில இருக்கும் பசங்க பெண்களுக்கு ஆச்சர்யம். On a funnier note, ஒருத்தரோட ரிப்ளை கீழே போட்டிருக்கிறோம்.
மற்ற சிட்டில இருக்கிற பசங்க பொண்ணுங்களோட குமுறல்: இருந்தாலும் இந்த சென்னைவாசிக ரொம்ப தைரியசாலிகப்பா.. ARR நிகழ்ச்சிக்கு நடந்த கதியை பார்த்தும் எப்படி இன்னைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு துணிஞ்சு டிக்கெட் வாங்கிட்டு போயி க்யூல நிக்கறானுகளோ.
அஜித் நடிச்ச படத்தில் கடைசியா அவருக்கு எல்லா பாடலும் ஹிட் ஆகியிருக்கு என்றால் அது கண்டிப்பா என்னை அறிந்தால் படம் தான். ஒரு நல்ல டீசண்டான படம். அப்படியொரு படம் அஜித்தே நெனச்சாலும் அவருக்கு கிடைப்பது கடினம். கிளாஸ் என்றால் கெளதம் தான். அதில் வரும் பாடலுக்கு நேற்று அவரும் கீர்த்தியும் போட்ட குத்தாட்டம் தான் இப்போது வைரல்.
வீடியோ:
Wait for that Harris mams dance🤩🥳🥳 pic.twitter.com/aD5yhWkQXw
— Soul Wanderer🎆 (@dumbinfidel) October 27, 2023