இசையில் அப்படியே உயிரை உருவி வெளிய எடுத்துட்டாரு ஹாரிஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. வீடியோ வைரல்.

Harris latest video viral

இன்று பிறந்தநாள் காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசை பயணம் மேலும் பல சரித்திர சாதனைகளை தொடர்ந்திட வாழ்த்துக்கள். அவர் போட்ட இசையை எல்லாம் இப்போ இருக்கும் இசையமைப்பாளர்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. விஜய் ஒருமுறை சொல்லும் பொது அவரை மெலடி கிங் என்று சொல்லி தான் அறிமுகம் செய்வார்.

விஜய், அஜித், கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு அவங்களோட சினிமா வாழ்க்கையில் ஒரு படத்தை நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்றால் இவருடைய பாடல்கள் கண்டிப்பா இருக்கும். தற்போது இவருக்கு கொஞ்சம் setback, ஆனால் கண்டிப்பா இவர் இந்த பெரிய நட்சத்திரங்களுடன் கைகோர்க்கும் பொழுது பிளாக்பஸ்டர் கொடுப்பார் என்று நினைக்கிறோம்.

Harris latest video viral

ஏன் இவர் சமீபத்தில் இசையமைத்து வெளிவந்த தி லெஜெண்ட் படத்திலேயே பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கும். அதுமட்டுமில்லாமல் BGM சக்கைபோடு போட்டிருப்பார். ரொம்ப நாள் பெண்டிங் ஒர்க் இவரோட இசையில் என்னவென்றால் அது துருவ நட்சத்திரம் படம் தான். இன்னும் ரிலீஸ் ஆகல, எப்போ ஆகும் இல்லை ஆகுமா என்று கூட தெரியவில்லை.

ஹாரிஸ் பாடல்கள் தான் இன்று இணையதளம் முழுக்க ட்ரெண்டிங். ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை விட இவருடைய பிறந்தநாளை மக்கள் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரை செல்லமாக “ஹாரிஸ் மாம்ஸ்” என்று தான் கூப்பிடறாங்க.

Video:

Related Posts

View all