எப்போடா இப்படி படம் எடுக்க ஆரம்பிச்சீங்க.. வீடியோன்னா இப்படி விடணும்.. பாத்து கத்துக்கோங்க.
ஆத்வி சேஸ் அப்டின்னு ஒரு நடிகர் இருக்காரு தெலுங்கில். எப்படி நம்மூரு சிம்பு, கமல் போல பல முகங்கள் அவருக்கு. நடிக்கவும் செய்வாரு, இயக்கவும் செய்வாரு. ஆனால் இவர் எதுக்கு பேமஸ் என்றால் த்ரில்லர் படங்களுக்கு தான். ஒரு படத்தில் ஒரு நெகடிவ் இல்லாமல் எப்படி இருக்கும்னா இவர் நடிச்ச எடுத்த படங்கள் பார்த்தல் அப்படி இருக்கும். கடைசி வரை யூகிக்கவே முடியாது அடுத்து என்ன வரும் என்று.
தெலுங்கு சினிமாவில் HIT முதல் கேஸ் என்ற படம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடியும் என்று. விஷ்வாக் சென் ஹீரோவாக நடித்திருப்பார். அதில் இவர் ஒரு disturbed போலீஸ் அதிகாரி. இவங்க கிட்டஒரு கேஸ் வரும் அதை இவர் solve செஞ்சாரா இல்லையா என்பது தான் மீதி கதை. அப்படி ஒரு த்ரில் மொமெண்ட்ஸ் படத்தில் வைத்து யூகிக்கவே முடியாத ட்விஸ்டுடன் படத்தை முடிச்சிருப்பாங்க இரண்டாம் பாகத்துக்கு ஒரு லீட் கொடுத்து.
இப்போது ஆத்வி செஸ் நடிப்பில் வெளிவந்திருக்கு இரண்டாம் பாகத்தின் ட்ரைலர். விரைவில் இந்த படம் வெளியிட இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் pride ஆக இருக்கப்போகிறது. எப்படி நம்மூரில் த்ரில்லர் படங்களா அருள்நிதி நடிக்கிறாரா அதுபோல தான் இவரும் என்று சொல்லலாம். ஆனால் இவர் எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் அதில் 100 சதவீதம் justify பண்ணுவார். பக்கா ஹீரோ material. அசால்ட்டா ஹாலிவுட் படத்தில் எல்லாம் நடிக்கலாம்.
இந்த ட்ரைலர் பாருங்க, ஒரு நொடியில் நீங்க ஆச்சர்யப்படுவீங்க. அதுவும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் ஒன்னு இருக்கும். சத்தியமா சொல்றோம் அதை நீங்க யூகிச்சிருக்கவே மாட்டீங்க. அடிச்சு சொல்றோம். ஒரு படத்திற்கான hype எப்படி create பண்ணிருக்கு பாருங்க ட்ரைலர். நம்ம கத்துக்கணும்.
Video: