ராஜா ராஜா தான்.. இப்போவும் அவர் பாட்டுக்கு மக்கள் வைப் பண்ணிட்டு இருக்காங்க.. கண்டிப்பா இந்த வீடியோ பார்த்தால் கண் கலங்கும்.
இளையராஜா பாட்டு மட்டும் தான் காலம் தாண்டியும் அழியாது போல. அவர் போட்ட பழைய இசையை அன்று வந்த டிக்கிலோனா, சமீபத்தில் வந்த காபி வித் காதல் படத்துலையும் ஹிட் ஆயிடுச்சு பார்த்தீங்களா. கமல்ஹாசன் ஒரு முறை சொன்னார் “உங்க பாட்டு அடுத்த 30 வருஷம் அப்புறம் வர படத்துல வந்தாலும் ஹிட் ஆகும் ஏன்னா பாட்டு அந்த மாதிரி” என்று. இதை தினம் தினம் நம்மால் காண முடிகிறது.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஒவ்வொரு வரியும் மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த தூழியிலே ஆட வந்த பாட்டு சின்ன தம்பி படத்திலிருந்து. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலும் இப்படி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த காலத்திலும் மன அமைதியை தரும் மறக்கமுடியாத சிறந்த பாடல். ஏன் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினோம் என்பது உங்களுக்கு கடைசியில் இணைத்துள்ள விடியோவை பார்த்தால் தெரியும்.
படம் வந்த புதிதில் இந்த பாட்டுதான் குடிசையிலிருந்து 5 Star Hotel வரை என்று நம்ம அம்மா அப்பாக்கள் சொல்லி கேட்டிருப்போம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் . கவிஞன் ஏற்றிய வரிகள் குரல் அமைப்பு இசையமைப்பு யாராலும் தர இயலாது எத்தனை ஆண்டு கழித்து பார்த்தாலும் தாய் பாசத்துக்கு சிறந்த பாடல் இது.
நினைவுபடுத்த மீண்டும் மீண்டும் கேக்க வைக்கும் பாடல் இது. நினைவு இருக்கிறதா மக்களே,அந்த காலக்கட்டத்தில் வீடியோ பாக்கணும்னா அவ்வளவு சுலபமாக பாக்க முடியாதுங்க சின்ன ரேடியோ கேசட் வாங்கி எந்த படம் வந்ததாலும் கதைவசனம் கேட்டு கேட்டு ரெக்கார்டு தேய்ற வரைக்கும் கேட்ட அந்த காலம் ஒரு வசந்தபொற்க்காலம் மறக்க முடியாத நிகழ்வு. தற்போது அந்த காலத்து வயதானவர் ஒருவர் ட்ரைனில் போகும்போது மனதார இந்த பாடலுக்கு வைப் பண்ணினது தான் தற்போது இணையத்தில் வைரல்.
Video: