இந்தியன் 2 படத்தின் இந்தியன் தாத்தா கெட்டப் லீக்.. அம்மாடியோவ் புல்லரிக்குது. லேட்டஸ்ட் போரோ வைரல்.
நேத்து இந்தியன் 2 தாத்தா கெட்டப் பாத்தங்க ஷங்கர் சார் கூட்டிட்டு போய் காட்டுனாரு ரொம்ப நல்லாயிருக்கு அது கமல்ஹாசன் சார் மாதிரியே இல்ல, இந்தியன் செம படம் இப்ப இந்தியன்2க்கு என்ன பண்ண போறேன்னு என் மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன் எண்டு ஒருமுறை பீட்டர் ஹெய்ன் சொல்லிருந்தாரு, அவர் தான் ஸ்டாண்ட் மாஸ்டர் இந்த படத்துக்கு. இப்போ கெட்டப் லீக் அனைத்துல இருந்து வெறியா இருக்கு.
Sequel எனப்படும் தொடர்ச்சி சினிமா உலக நாயகன் #கமல்ஹாசன் நிறைய செய்திருக்கிறார்.. உதாரணமாக, கல்யாணராமன் - ஜப்பானில் கல்யாணராமன், விஸ்வரூபம் - விஸ்வரூபம் 2, விக்ரம் - விக்ரம் 2, இப்போ இந்தியன் - இந்தியன் 2.
24 வருடத்தை கடந்து, இன்றும் இன்றைய சூழலில் அழுத்தமாக கருத்துகளை பதிவு செய்யும் ஒரு திரைப்படம். பல இன்னல்களை அன்றே சொன்ன படம். இந்தியன். உலகநாயகன் கமல்ஹாசன், நேர்மை என்ற சொல்லுக்கு நின்று விளையாடிய படம். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்தது. 24வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த தாத்தா கெட்டப் பார்த்தல் நமக்கு goosebumps வருதென்றால் அது எப்படிப்பட்ட படம் என்று நினைத்து பாருங்கள்.
இந்த படத்தில் காஜல், ப்ரியா இருவருமே முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதில் யார் கதாநாயகி என்று தெரியவில்லை. அதுபோக பாபி சிம்ஹா வேற முக்கிய ரோல் பண்றாரு. இன்னும் பல surprise இருக்கு படத்தில், மறைந்த நடிகர் விவேக் அவர்கள் நடித்த காட்சியில் மீண்டும் பிரபல நடிகரான குரு சோமசுந்தரம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படம் 2023 ரிலீஸ். சம்பவம் தான்.