இந்தியன் வெல்லட்டும்.. இந்தியா சொல்லட்டும்.. தலைவன் இருக்கிறான் என்று.. லேட்டஸ்ட் மிரட்டல் வீடியோ வைரல்.
லஞ்சம்: நேற்றைய பாவம்.. இன்றைய குற்றம்..
நாளைய சட்டம்..சங்கர் பழைய இந்தியன் எடுக்குறப்ப அது ஒரு கிளாசிக் படமா இருந்துச்சு ரகுமான் இசை முக்கிய பலம் ஆனால் இப்ப அதே சங்கர் இந்தியன்-2 இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி எடுக்குறப்ப பாசிட்டிவ் நெகட்டிவ்னு எல்லாமே வரும் இதுல சுஜாதா இல்லாதது பெரிய மைனஸ்தான், படம் வரட்டும். இரண்டு பாகங்களா வெளிவரும் என்று நினைக்கிறோம்.
எப்படி பட்ட படம் #இந்தியன் அதோட அடுத்த பார்ட்க்கு இப்படியா போட்டு வைப்பார் இசை என்று அனிருத் மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் ரசிகர்கள் வைத்து வருகின்றனர். கண்டிப்பா படத்தில் வேற மாதிரி elevation எல்லாம் கொடுத்திருவாரு என்று நம்புகிறோம்.
இந்தியன் படம் 1996 ல வந்துச்சு அப்பவே சேனாதிபதி கேரக்டர்க்கு 75 வயசு இருக்கும். இப்ப வர இருந்தா 102 வயசு ஆகிருக்குமே சரி பொருத்துருந்து பாப்போம் என்று ஏகப்பட்ட மக்கள் கருத்துக்கள். இப்போவே இப்படி பேசுறாங்க இனி படம் வந்தால் என்னவெல்லாம் பேச போகிறார்களோ.
இந்தியன் இரண்டாம் பாகத்தின் மூலமாக இவர்களை (விவேக், மனோபாலா) காண ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது, உண்மையாகவே செம்ம.
Video: