இந்தியன் 2 படம் ரி-ஸ்டார்ட்.. மிரட்டல் கெட்டப்க்கு மாறிய கமல்ஹாசன்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Indian 2 kamal getup 3

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இந்தியன் 2 படம் தான் ஒரு comeback படமாக இருந்திருக்க வேண்டும். சங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைய நேரம் எடுத்து எழுதிய sequel அது. அந்த படத்தில் அப்போது சட்டமன்ற தேர்தல்கள் நடக்க இருந்ததால், படத்திலும் அனல் பறக்கும் வசனங்கள் எல்லாம் வைத்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்திக்கான எதிர்பார்ப்பு வானளவு இருந்தது.

Indian 2 kamal getup 3

திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கஷ்டப்பட்டு தயாரிப்பாளர் ஷூட்டிங் செய்யலாம் என்று permission வாங்கியபோது, அன்று நடத்தக்கூடாது என்று அப்போது இருந்த ஆளும்கட்சி தொல்லைகள், பின்னர் ஷூட்டிங் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தது போன்ற சம்பவங்கள் மிகவும் பின்னடைவாக அமைந்தது.

கமலும் பின்னர் அந்த நேரத்தில் தேர்தல் நெருங்கியதால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் ஒரே அடியாக படத்தை நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து கொஞ்ச நாளில் விக்ரம் படத்தை நடித்து முடித்தார்.

இந்த படம் ரிலீசுக்கு பின் மீண்டும் புத்துணர்ச்சி ஏற்பட்டது கமலுக்கு கரணம் இந்த படம் தான் தமிழ் சினிமாவில் இதுவரை அதிக லாபத்தை கொடுத்த திரைப்படம். கிட்டத்தட்ட வசூல் 500 கோடி என்று சொல்கின்றனர்.

Indian 2 kamal getup 3

தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை வாங்கி மீதமுள்ள படத்தை அவர் தயாரிக்கவுள்ளார். இதனால் மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. படத்தில் தற்போது கமல் வேற லெவல் கெட்டபுக்கு மாறியுள்ளார். இவ்வளவு நாள் தடியோடு இருந்தவர், தற்போது விருமாண்டி கெட்டப்க்கு மாறிட்டாரு. இனி சம்பவம் தான்.

Indian 2 kamal getup 3

Related Posts

View all