ஆரம்பமானது இந்தியன் 2. உலகநாயகன் கெட்டப் வெறித்தனம் max தீயா இருக்காரு.. வீடியோ வைரல்.

Indian 2 officially started

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கிட்டத்தட்ட 50% சதவீத வேலைகள் முடிந்திருக்கிறது. பின்னர் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பணிகள் ஆகியவை இந்த படத்திற்கு பின்னடைவாக அமைந்தது. ஷங்கரும் வேறு படத்தில் பிசியானார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. ரசிகர்கள் இந்த படம் அவ்வளவு தான் மருதநாயகம் படம் போல இந்த படமும் ட்ராப் ஆகிவிட்டது என்று கருத ஆரம்பித்தனர். பின்னர் தேர்தல் முடித்து கமல் மிகவும் வேகமாக நடித்து முடித்த படம் தான் விக்ரம். கிட்டத்தட்ட 3, 4 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை திரையில் பார்த்து ரசித்தோம்.

Indian 2 officially started

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி கமலுக்கு மீண்டும் ஒரு புதர்ச்சியை கொடுத்தது, மீண்டும் படங்களில் கமிட் ஆக காரணமாக இருந்தது. பின்னர் கமல் எங்கு சென்றாலும் ரசிகர்கள் இந்தியன் 2 இந்தியன் 2 என்று கேட்க இதை எப்படியாவது நடித்து முடிக்க வேண்டும் ரசிகர்களுக்காக என்று எண்ணி மீண்டும் தொடங்கிவிட்டார். தற்போது லைக்காவுடன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி, இன்று அவரே அவரின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஆம், இன்று முதல் இந்தியன் 2 அதிகாரபூர்வமாக தொடங்கியிருக்கிறது.

Tweet/Video:

Related Posts

View all