ஹாலிவுட் படத்துல பறந்தா விசில் அடிப்பாங்க. இங்க?? பெண் சூப்பர் ஹீரோ படம் தமிழில். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சம கால மற்ற நடிகர்கள் போல குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் புது முயற்சிகளை மேற்கொண்டு பல தோல்விகளும் சில வெற்றிகளும் பெற்றாலே பொது, அது நமக்கு திருப்தி அளிக்கும். காலம் கடந்தும் அந்த காவியங்கள் பேசப்படும். நம் புது முயற்சிகளை ஒரே ஒரு ஏளனச் சிரிப்பில் புதைத்து விடுகின்றனர் சிலர். அதையெல்லாம் மீறி தான் இங்கு ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஏனென்றால் ஒருவர் ரொம்ப எளிதாக ஒரு படத்தின் மேல் குற்றம் சொல்லி அந்த படத்தை பிளாப் செய்ய விமர்சகர்கள் என்ற பெயரில் நிறைய பெரு உலாவுகின்றனர்.
தற்போது ஒரு இயக்குனரின் புது முயற்சியில் உருவான படம் தான் “இந்திராணி”. இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படம். ஹாலிவூட்டில் இது போன்று பல படங்கள் வந்துள்ளன, ஹாலிவுட் ஹீரோயின்கள் பறந்தால் விசில் தட்டி நாம் பார்க்கிறோம், ஆனால் இதுவே நம்ம ஊர் ஹீரோயின்கள் பறந்தால் அவர்களை பார்த்து சிரிக்கிறோம், அதனாலே இங்கு பல சூப்பர்ஹீரோ படங்களில் கூட பேண்டஸியை mix செய்ய இயக்குனர்கள் தயங்குகின்றனர்.
அதையெல்லாம் உடைக்கலாம் என்று இந்த இந்திராணி படத்தின் இயக்குனர் Stephen Pallam முடிவு செஞ்சு இறங்கி நடிச்சிருக்காரு. தமிழ் சினிமாவிற்கு ஒரு புது பெண் சூப்பர்ஹீரோ. யணியா இந்த படத்தின் டைட்டில் ரோல் பண்ணிருக்காங்க. வில்லனா வேதாளம் படத்தின் நடிச்ச கபீர் துஹான் சிங் நடிச்சிருக்காரு. இவங்கு இரண்டு பேருக்குமான மோதல் தான் கதை, ஆனால் இவர்கள் இருவருக்கும் எப்படி சூப்பர் பவர் கிடைக்கிறது என்பதை justify செய்துவிட்டால் படம் பிளாக்பஸ்டர்.
பெரிய ஹீரோஸ் நடித்தால் தான் இந்த மாதிரி படம் attention பெரும் என்ற விஷத்தை முதலில் நாம் மாற்ற வேண்டும். ஏனென்றால் எந்த மொழி சினிமா ஆயினும் தற்போது OTT தளங்கள் இருப்பதால் அனைவராலும் பார்த்து வரவேற்கப்படுகிறது.
வீடியோ: