என்னடா சொல்ல வர்றீங்க.. இதுவே போட்டோவே இப்படி மிரட்டுது.. ப்பா நயன்தாரா லுக்கு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் இறைவன், இந்த படத்தை அகமத் இல்லையாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தான் ரொம்ப நாளா நடந்துட்டு இப்போ தான் திரைக்கு சரி எல்லா ஏற்பாடுகளும் செஞ்சுட்டு இருந்தது தயாரிப்பு நிறுவனம். படம் எப்போ வருது என்று மிரட்டல் போஸ்டருடன் ரிலீஸ் பண்ணிருக்காங்க படக்குழு.
உங்களுக்கு இயக்குனர் அகமத் யார் என்று தெரியவில்லை என்றால் உங்களுக்காக அவர் எடுத்த படங்களை சொல்லி நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம். இவர் மூன்று படங்கள் எடுத்திருக்காரு, மூணுமே சூப்பர் ஹிட் அதுவும் கடைசி படம் உதயநிதிக்கு நல்ல நற்பெயரை வாங்கிக்கொடுத்த படம். என்ன கெஸ் பண்ணிடீங்களா?
அவர் எடுத்த படங்கள்: வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன். இந்த மூண்டு படங்களுமே செம்ம வெற்றியடைந்த படங்கள். எல்லா படத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் ஒற்றுமை இருக்காது. மூணுமே வேற வேற களங்கள் ஆனால் அந்த மூன்று படத்தையும் வெற்றிப்படமாக கொடுத்திருப்பார்.
படம் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆகுது. இந்த போஸ்டர் பார்த்தாலே மிரட்டலா இருக்கில்ல. நயன்தாராவை பெரிய திரையில் பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு. அவங்களுக்கு பெரிய படமான ஜவான் ரிலீஸ் ஆவுது, அப்புறம் இந்த படம் இறைவன், சோலோவா படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. ஜெயம் ரவிக்கு இந்த வருடத்தின் மூன்றாவது ரிலீஸ். ஹிட் ஆகும் என்று நம்புகிறோம்.