என்ன இது ரத்த ஆறு ஓடுது.. ராட்சசன் விட 100 மடங்கு இருக்கும் போலையே.. இறைவன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Iraivan video viral

ஹாலிவுட் படங்களில் நாம் நிறைய படங்கள் பெரிய சைக்கோபாத் கில்லிங் படங்கள் எல்லாம் பார்த்திருப்போம். ரொம்ப கொடூரமாக எடுத்து வெச்சிருப்பாங்க. ஒரு சில படங்கள் எல்லாம் தனியா பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ரொம்ப brutally எடுத்து வெச்சிருப்பாங்க. அந்த மாதிரி படங்கள் எல்லாம் பெருசா தமிழில் வந்ததில்லை.

ஆனால் அந்த மாதிரி படத்துக்கும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ஒரு பவர்புல்லான கதைக்கு ஹீரோ மிரட்டலா இருக்க வேண்டும் என்பதை விட அந்த வில்லன் அவ்வளவு கொடூரமாக இருந்தால் தான் ஹீரோக்கே ஒரு மாஸ் elevation கிடைக்கும். அந்த வகையில் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்தவரையே இந்த படத்திலும் வில்லனா போட்டிருக்காங்க.

Iraivan video viral

அம்மாடியோவ் எவ்வளவு கொடூர வில்லனா தெரியிறாரு. கண்டிப்பா ஜெயம் ரவிக்கு இந்த படம் ரொம்ப பெரிய படமா இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் ஒவ்வொரு frame-உம் கதை சொல்லுது. சமரசம் இல்லாமல் A certificate வந்தாலும் பிரச்னை இல்லை இப்படி தான் கதை இருக்க வேண்டும் என்று சமாதானம் பண்ணாம இருக்கும் படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.

ஜெயம் ரவி நேற்று நடந்த விழாவில் குறிப்பாக சொன்னது, இந்த படத்தை பார்க்க குழந்தைகளை கூப்பிட்டு வராதீங்க. அடல்ட்ஸ்க்கு மட்டும் தான் என்று தெளிவா சொல்லிட்டாரு. பேமிலி ரசிகர்களுக்கு அடுத்து பிரதர் மாதிரி படங்கள் பண்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ பார்த்தல் தெரியும் இந்த படம் எப்படி இருக்கும் என்று.

Video:

Related Posts

View all