என் லவ்வரு என்ன லவ் பண்றா உனக்கு என்ன நோவுது.. ஜெயிலர் பட ஜாபர் காதலி Video வைரல்..!
ஒரு சில வருடங்களுக்கு முன்னாடி பாவக்கதைகள் என்ற வெப் சீரிஸ் ஒன்று வந்தது. அதில் விக்னேஷ் சிவன் ஒரு எபிசொட் இயக்கியிருப்பாரு. வந்த எந்த பாகத்திலும் வில்லன் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்ததில்லை. ரொம்ப குட்டினொண்டு தான் பையன் ஆனால் சரியான சம்பவம் பண்ணிருப்பார். அதில் இருந்து மக்கள் இவர் யார் யார் என்று தேட ஆரம்பிச்சாங்க.
ஆள் பாக்க தாங்க குட்டி ஆனால் பேச்சு, டான்சு, ஸ்டைல் எல்லாம் வேற லெவல். எப்படி அர்ஜுன் தாஸ்க்கு பேஸ் வாய்ஸ் ரொம்ப பேமஸோ அதுபோல தான் இவருக்கும். இவரோட குரலும் பேஸ் வாய்ஸ் தான். சும்மா கணீர்ன்னு இருக்கும். மீண்டும் இவரை விக்ரம் படத்தில் பார்த்தோம், கமலுடன் மோதுற மாதிரி காட்சிகள் எல்லாம் வரும், செம்மையா பண்ணிருப்பாரு.
அடுத்து இவர் என்ன செய்ய போறாரு என்று பார்த்தால் சூப்பர்ஸ்டார் படம், ஜெயிலர். இவருக்கு நிறைய காட்சிகள் இருக்கு ஜெயிலர் படத்தில். அதுவும் ரஜினி கூட ட்ராவல் பண்ற மாதிரியே நிறைய காட்சிகள். கொஞ்சம் நகைச்சுவையும் இவருக்கு நல்லா வருது. ஜெயிலர் செட்டில் இவங்க லவ்வர கூட்டிட்டு போய் ரஜினிக்கு introduce பண்ணி போட்டோ எடுத்திருக்காங்க.
ரொம்ப நாளைக்கு முன்னாடி ப்ளூ சட்டை மாறன் இவரை நக்கல் செய்து அதாவது லில்லிபுட் அந்த மாதிரி எல்லாம் கேலி செய்து ஒரு விமர்சனம் பண்ணாரு. அதற்கு பதிலளிக்கும் விதமா ஜாபர் ஒரு நேர்காணலில் சொல்லிருப்பாரு. அப்போது ‘என் கேர்ள் பிரண்ட் என்ன லவ் பண்றா, என் உடம்பு நல்லா தான் இருக்கு’ என்று சொல்லிருப்பார். அவங்க யாரென்று பலர் கேட்டுட்டு இருந்தாங்க, இதோ இவங்க தான்.
லேட்டஸ்ட் Video: