சீனாவில் திரையிடப்பட்ட ஜெய் பீம்.. ராஜாகண்ணு, செங்கேணி நடிப்பில் கண் கலங்கிய ரசிகர்கள். வீடியோ வைரல்.
2021ம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் படத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. ஏற்கனவே படம் பல விருதுகளை அள்ளியது. அதனால் இந்த படத்தின் அங்கீகாரம் உயர்ந்து கொண்டே போனது.
தற்போது இந்த படத்துக்கு மீண்டுமொரு அங்கீகாரம். சீனாவில் இந்த படம் திரையிடப்பட்டது.
மணிகண்டன் மற்றும் லிஜமோல் ஜோஸ் நடிப்பை பார்த்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் கண் கலங்கியது ஆச்சர்யம். மொழி வேறாக இருந்தாலும் emotion என்பது ஒன்னு தானே.
படம் பார்த்த பிறகு ஓசியா ரசிகை ஒருவர் ஜெய் பீம் படம் அவருக்குள் ஏற்படுத்தின தாக்கத்தை பற்றி பேசினார், மேலும் அவர் இன்னும் பல தமிழ் படங்களை பார்க்க விரும்புகிறேன் என்று கருத்து தெரிவித்தார்.
இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்பது மட்டும் தான் ஒரே குறை.
Viral Video:
#JaiBhim - Emotional connect beyond boundaries..❣️💯#Suriya 🔥- #TJGnanavel - @RSeanRoldanpic.twitter.com/N54zwQx34H
— Laxmi Kanth (@iammoviebuff007) August 20, 2022