ஜெய்லரில் கண்டிப்பா நெல்சன் ஜெயிப்பாரு.. நியூ addition இவரு.. அப்படியிருக்கு கேஸ்டிங். ப்ளாக்பஸ்டர் லோடிங். முழு விவரம்.
நாம சூப்பர்ஸ்டாருக்கு இப்போ ரொம்ப முக்கியம் ஒருமிகப்பெரிய பிளாக்பாஸ்டர். ப்ளாக்பஸ்டர் படங்களா கொடுத்த வந்த இவருக்கு இப்போ இப்படி ஒரு சொட்டை. ஆனாலும் இந்த குதிரை இன்னும் ஓடிட்டு இருக்கு என்று நினைக்கும்போது தான் ரொம்ப பெருமையா இருக்கு. இவர் எல்லாம் இளம் தலைமுறைக்கு ஒரு inspiration.
50 வயதிலேயே ஓய்வு பெற்று விடலாம் என்று நினைக்கும் எல்லாருக்குமே ரஜினி வந்து ஒரு எடுத்துக்காட்டு. சினிமாத்துறை அவங்க சும்மா நடிச்ச கோடில சம்பாதிப்பாங்க என்ற பேச்சு இருக்கும். ஆனால் அது அப்படியில்லை அவங்க அவங்க தொழிலில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கலாம். அவர் கோடில சம்பாதிக்க அவர் போட்ட உழைப்பு வேற மாதிரி.
தற்போது விஜய்லர் படத்தின் அப்டேட் வந்திருக்கிறது. அது என்னவென்றால் ஜெயிலர் படத்தின் கேஸ்டிங்கில் இன்னொருத்தர் ஜாயின் பண்ணிருக்காரு. அவர் வேற யாருமில்லை பாலிவுட் versatile நடிகர் ஜாக்கி செரப். தெலுங்கில் இருந்து ஒருத்தர், மலையாளத்துல இருந்து ஒருத்தர், கன்னட மொழியில் இருந்து ஒருவர், ஹிந்தியில் இருந்து ஒருத்தர் என்று மிகப்பெரிய பான் இந்தியா படமா எடுத்துட்டு இருக்காரு நெல்சன்.
இவங்க எல்லாருக்கும் எப்படியும் சின்ன சின்ன ரோலா தான் இருக்கு, எப்படியும் ரஜினி தான் புல்லா வருவாரு. ஆனால் இவங்க எல்லாரும் இந்த படத்தில் நடிப்பதற்கு காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவங்க எல்லாருக்கும் அவங்க ரோல் மட்டும் நன்றாக இருந்தா பொது படம் நின்னு பேசும். ஆகஸ்ட் ரிலீஸ் என்று நினைக்கிறோம். பார்க்கலாம்.