இந்த தடவை மிஸ் ஆகாது.. நெல்சன் திலீப்குமார் சம்பவம்.. தலைவர் பேரு முத்துவேல் பாண்டியன்.. ஜெயிலர் வீடியோ கிலிம்ப்ஸ் வைரல்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அவருடைய 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு நெல்சன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் கிலிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. ரொம்ப அமைதியா அடக்கமா ஒத்திருக்கும் ரஜினியை, கடைசியில் அந்த கத்தி எடுக்கும் போது உடம்பெல்லாம் முறுக்கேறி இருக்கிறது. கண்டிப்பா இந்த படம் வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம். அவருடைய தோற்றமே ஒரு மாதிரி கெத்தா இருக்கு.
மேலும் நெல்சன் ஒரு செமயான இயக்குனர் தான், பீஸ்ட் ஒரு படம் சரியாக போகவில்லை என்பதால் அவரை குறைத்து மதிப்பிட முடியாது. சூப்பரான இயக்குனர். அவருக்குனு ஊரு மேக்கிங் ஸ்டைல் இருக்கிறது. அது எந்த இயக்குனருக்கும் இல்லாத ஒரு வித்தியாசம், டார்க் காமெடி இவருடைய ப்ளஸ் என்று கூறுவார். ஆனால் அதுக்குள்ள ஓர் மாஸ் வெச்சிருப்பாரு பாருங்க. அதுமட்டுமில்லாமல் அவர் படத்தில் ஒரு விதியசமான லைட்டிங் இருக்கும்.
நெல்சனிடம் பிப்ரவரிக்கும் படத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் போல, அந்த படத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏனென்றால் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறது சன் pictures. இந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீசான பீஸ்ட் சரியாக போகாததால் 2023 அதே மாதத்தில் வெளியிட்டு பந்தயம் அடிக்க காத்திருக்கிறார்களா சன் மட்டும் நெல்சன்.
விஜய்க்கு பீஸ்ட் ஒரு வித்தியாசமான படம் தான். படம் ஓடாததற்கு காரணம் கொஞ்சம் திரைக்கதையில் லாஜிக் இல்லாதது மட்டுமே. கொஞ்சம் டீடைலிங் பண்ணி எடுத்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும். அதனால் கண்டிப்பாக இந்த படத்தில் அது எல்லாம் இல்லாமல் சரியாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துவேல் பாண்டியன் என்று ரஜினி குரலில் சொல்லும்போது அலற விடப்போறார் அனிருத் பின்னணி இசையில்.
Video: