சைலன்ட் சம்பவம் பண்ணும் நெல்சன் ஜெயிலர் படத்துல.. சூப்பர்ஸ்டார் கூட இன்னொரு சூப்பர்ஸ்டார்.. மெகா அப்டேட்.
இயக்குனர் நெளசானுக்கு பேஸ்ட் படம் அவ்வளவு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, எப்படியோ விஜயின் ஸ்டார்ப்பவர் காரணமாக இந்த படம் ஓடிவிட்டது. வசூலிலும் இந்த படம் தான் போன வருடத்தில் நம்பர் 4. பொன்னியின் செல்வன், விக்ரம், KGF படங்களுக்கு பின்னால் இருக்கிறது. இதற்கு முற்றிலும் காரணம் விஜயின் பீக் தான்.
அந்த படம் எடுக்கும்போதே நெல்சன் கமிட் ஆனது சூப்பர்ஸ்டாரை வைத்து ஜெயிலர் படம் இயக்குவது என்று. பேஸ்ட் படத்தின் தோல்வியால் அந்த படம் ரஜினி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்ற பேச்செல்லாம் அடிபட்டது. ஆனால் படம் இப்போது 70 சதவீதம் வரை முடிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் ஒரு கிலிம்ப்ஸ் வந்தது சும்மா மாசா இருந்தார் ரஜினி.
ஜெயிலர் படம் நெல்சன்க்கு மிகவும் முக்கியமான படம். இந்த படத்தில் அவர் விட்ட இடத்தை பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். பீஸ்ட் படத்துக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஒரு லேர்னிங்கா எடுத்து இந்த படத்தில் சம்பவம் செய்வார் என்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு பழைய டெம்ப்ளட் larger தான் லைப் கதாபாத்திரம் எல்லாம் புடிக்கமாட்டீங்குது.
அந்த படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்க, இப்போ மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். கண்டிப்பா இதுவொரு ப்ரொபேர் பான் இந்தியா படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நெல்சன் திரைக்கதை ஸ்பீடா இருக்கும், ஆனால் லேயர் மட்டும் சரியாக வைத்துவிட்டால் ரஜினிக்கு பெரிய ஹிட் காத்திருக்கிறது.