ஜெயிலர் படத்தின் வில்லன்.. ரஜினியுடன் மோதும் அளவுக்கு ஒர்த்தா? வெளிவந்த மெகா அப்டேட். போட்டோஸ் வைரல்.
நேற்று 22/08/2022 ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் இனிய நாள். நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினியின் அடுத்தமான ஜெயிலர் ஷூட்டிங் இனிதே தொடங்கியுள்ளது.
அதை உறுதி செய்யும் வண்ணம் அதிகாரபூர்வமாக நேற்று ஒரு அல்ட்ரா மாஸ் போஸ்டரை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்.
நமக்கு தற்போது கிடைத்த அப்டேட் என்னவென்றால், ரஜினியுடன் வில்லனாக மோத மலையாள பட நடிகர் விநாயகனை படக்குழு ஓகே செய்துள்ளதாக நம்பகத்தக்க செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் இவர் ரஜினியுடன் மோதும் அளவுக்கு ஒர்த்தா என்று கேட்டால் ஒர்த்து தான். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த மலையாள படங்களை பார்த்தல் தெரியும். கண்டிப்பாக வில்லனாக மிரட்டுவார். மேலும் நெல்சன் இயக்கத்தில் முதல் படத்தில் இருந்தே கூட இருக்கும் யோகி பாபு இந்த படத்திலும் நடிக்கிறார்.
நாயகிகளாக ரம்யா கிருஷ்ணன், தமன்னா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இதில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பது மட்டும் உறுதி, அதை அவர் ஒரு பேட்டியில் உறுதி படுத்தினார்.
தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பது குறித்த அப்டேட் அதிகாரபூர்வமாக வந்தால் தான் உண்மை.
How fans see the poster: