ஜெயிலர் படம் உண்மையாவே எப்படி இருக்கு.. பீஸ்ட்க்கு ஒருபடி மேலையா இல்ல? முழு விவரம்.
நேற்று அனைவரும் எதிர்பார்த்த ஜெயிலர் படம் வெளியாகி திரையரங்கம் நிரம்பி வழியுது. எப்போவுமே இல்லாத அளவுக்கு அப்டின்னு சொல்ல முடியாது கடந்த சில வருடங்களில் சூப்பர்ஸ்டார் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படம் பெரிய ஓப்பனிங் கிடைச்சிருக்கு. மீண்டும் நான் தான் கிங்கு இங்க என்பதை நிரூபித்திருக்கிறாரு தலைவரு.
சரி படம் எப்படி இருக்கிறது என்றால் நெல்சன் அவரது உலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தந்துள்ளார். இந்த படம் தான் நெல்சன் எடுத்த படங்களிலேயே பெஸ்ட்டா என்றால் கிடையாது. கண்டிப்பா மூன்றாவது பெஸ்ட் என்று சொல்லலாம். எப்போவுமே கோலமாவு கோகிலா தான் பர்ஸ்டு. அத படத்தில் lag என்பதே இருக்காது, அவ்வளவு அருமையான திரைக்கதை.
ஜெயிலர் படம் பீஸ்ட் படத்துக்கு ஒரு படி மேலே என்று சொல்லலாம். இந்த படத்தின் கதை சிலை கடத்தல் சம்பத்தப்பட்ட கதை தான். அதில் கொஞ்சம் ட்விஸ்ட் & டர்ன்ஸ் இருக்கு. ரஜினியின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு எப்படி கதாபாத்திரம் கொடுத்தால் நன்றா இருக்கும் என்று யோசித்து ஸ்டாண்ட் காட்சிகள், மாஸ் காட்சிகள் எல்லாம் சூப்பரா பண்ணிருக்காரு.
இந்த படத்தின் முதல் பாதி ரொம்ப பிரமாதமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் நிறைய சறுக்கல் இருக்கு. ஆனால் அதை ஒட்டுமொத்தமாக கிளைமாக்ஸ் கட்சியில் மூன்று சூப்பர்ஸ்டார்களையும் காட்டி நெல்சன் ஸ்கோர் பண்ணிட்டாரு. மோகன்லால் ஒரு பக்கம் மாஸ் காமிக்க, சிவராஜ்குமார் ஒரு பக்கம் மாஸ், நம்ம தலைவர் ஒரு பக்கம். இவங்களை எல்லாம் விட இன்னும் அதிகமா ஸ்கொர் பண்ணது அனிருத் தான்.
கேமரா, இசை, எடிட்டிங் எல்லாமே நன்றாக வந்திருக்கு. குறையே இல்லையா என்றால் ஏகப்பட்ட குறைகள் ஆனால் அது எல்லாமே ரஜினியின் screen ப்ரெசென்ஸ் மாத்திடுச்சு.
ரேட்டிங். 3.5/5