எல்லா மொழிகளிலும் இருந்தும் நடிகர்கள்.. ஜெயிலர் படத்தில் நெல்சன் சம்பவம் இருக்கு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஒவ்வொரு நாளும் ஜெயிலர் படத்தின் updates வரும்போதெல்லாம் ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. கண்டிப்பா ரஜினிக்கு ஒரு ஒரு தரமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பது போல தோன்றுகிறது. பீஸ்ட் படத்தின் தோல்வி ரொம்ப பாதிச்சிருச்சு என்று நினைக்கிறோம் நெல்சனை. அதனால் வெறித்தனமா ஒர்க் பண்ணிட்டு இருக்காரு.
பீஸ்ட் படம்கூட இப்போ பார்த்தல் நல்லா போர் அடிக்காம தான் போகும், அந்த படத்தில் விஜய்க்கு பதில் வேறு யாரு நடித்திருந்தாலும் ஓடியிருக்கும் காரணம் விஜயோட அந்த stature அந்த கதை தாங்கல. விஜய் மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் இருக்கும் பொது கதை அந்தளவுக்கு வெய்ட்டா இருக்க வேண்டும். பீஸ்ட் கதை வெய்ட்டு தான், ஆனால் இன்னும் கொஞ்சம் க்ரிப்பா பண்ணிருக்கலாம்.
மாஸ் ஹீரோஸ் இதுபோன்று இறங்கி வந்து வித்தியாசமா படம் பண்ண வேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயம். அதனால் அவர்களை சரியாக திருப்தி படுத்திவிட வேண்டும். அதேபோல தான் ரசிகர்களையும், ஏனென்றால் அவர்களது ஸ்டார் படத்தை ஒரு வருடம் காத்திருந்து திரையில் பார்ப்பாங்க. அவங்களுக்கு சரியான தீனியாக இருக்கவேண்டும் அந்த படம்.
ஜெயிலர் பொறுத்தவரை எல்லாமே நல்லதா தான் நடக்கிறது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கிலிருந்து புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டிய சுன்னி அப்பறம் நாம இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ரஜினி இருக்கும்போது அது ரொம்ப பெரிய படமாக இருக்க வேண்டும். இந்த முறை பந்து மிஸ் ஆகாது என்று நினைக்கிறோம்.