வெளியானது ஜெயிலர் பட போஸ்டர்! வேற மாரி மாஸ் லுக்கில் தலைவர்! Update மற்றும் போஸ்டர் வைரல்.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே உற்று நோக்கும் அடுத்த படம் ஜெயிலர், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று தொடங்குகிறது.
ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினி 10 தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் 22ம் தேதி ஷூட்டிங் தொடங்கும் என்று. அதேபோல் நேற்று இரவு யாரும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் ஒரு அதிரடி அப்டேட்டை விட்டது.
22-08-2022 11 AM என்று தான் ட்வீட் போட்டார்கள். அவ்வளவு தான் எப்போது அந்த நேரம் வரும் என்று தவமாய் தவம் கிடக்கின்றனர் ரசிகர். அதேபோல் மிரட்டலாக ஒரு போட்டோவை இறங்கியுள்ளது படக்குழு.
பீஸ்ட் படம் வசூல் ரீடிக மிகப்பெரிய வெற்றி ஆனால் ஒரு இயக்குனராக நெல்சனுக்கு கொஞ்சம் அடி. அந்த அடியிலிருந்து கொஞ்சம் மீண்டு கடுமையாக கடந்த மூன்று நான்கு மாதங்களாக உழைத்திருக்கிறார்.
அந்த உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய அடையவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ரஜினிக்கும் சமீப காலமாய் ஒரு சூப்பர் ஹிட் படம் கூட கிடைக்கவில்லை, எல்லாம் வசூல் ரீதியாக வெற்றி பெருகிறதே தவிர ரசிகர்களை முழுதும் திருப்தி படுத்தும் படமாக அமையவில்லை.
இந்த படத்தில் ரஜினி, நெல்சன் இருவரும் மிரட்டல் comeback கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.