சமீபத்தில் நடந்த வாரிசு ஆடியோ லான்ச்ல விஜயின் ஹேர்ஸ்டைல் மற்றும் அவர் பற்றி விமர்சித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

James vasanthan criticized vijay

சமீபத்தில் நடந்த வாரிசு ஆடியோ லான்ச்ல விஜயின் ஹேர்ஸ்டைல் மற்றும் அவர் பற்றி விமர்சித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்:

‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன்.நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.

ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.

அதற்கு ஆடியன்ஸ் reaction: Perfectly said! Very well written with apt choice of words sir.. especially –’ நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். '

வணக்கம். மிகத் தெளிவான விளக்கம். இடம், பொருள் & ஏவல்..இது simplicity அல்ல simple ஆக செல்வதற்கு. நிகழ்சியின் நடு நாயகனாக அமரும் பட்சத்தில் நிச்சயமாக , தனது தோற்றத்திற்கும் முன்னுறிமை அளித்தால் சிறப்பு. இது படாதோபத்தை காட்டுவதற்கு அல்ல. மற்ற உச்ச திரைநட்சத்திரங்கள் இதை கடைபிடிக்கும் போது, இவரைப் போன்றவர்களும் கண்டிப்பாக இதை கடைப்பிடித்தல் வேண்டும்..இது என்னுடைய கருத்து மட்டுமே. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல

தளபதி மிகவும் அருமையாக வந்தால் அதற்கும் விமர்சனம் வரும். எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். உங்களுக்கு அவரை கட்டுபடுத்த வேண்டும் என்று ஆசை.. ? அவர் அவராகவே இருபது நல்லது தானே . உங்களால் அஜித்தை விமர்சனம் செய்ய முடியுமா?

சினிமாலயும் நிறைய நேரம் ஹீரோக்கள் அப்படித்தான் வர்றாங்க. 🤦🏽 Grooming எல்லாம் ஆண்களுக்கு தேவையில்லை என்பதுதான் தற்கால நியதி.

ஒப்பனைதான் ஒருவரை அழகாக மாற்றுகிறது அவர் பேசியதால் உலக பொருளாதாரம் மாற போவதும் இல்லை மக்களின் கஷ்டம் முடிய போவதும் இல்லை சினிமா என்பது மக்களின் பொழுது போக்கு அம்சமாக இருக்கிறது அனைத்து துறைகள் போல சினிமாவும் ஒரு துறை மட்டுமே.

தளபதி ஒரு நடிகர் என்பதால் அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு சீன்களிலும் அவர் வெவ்வேறு உடைகளை அணிந்து ஸ்மார்ட் ஆக நடித்திருப்பார் அதனால் என்னவோ நிஜத்தில் அவர் உடையின் மீது அவ்வளவு அக்கறை அவர் செலுத்தவில்லை இதை நீங்கள் பெரிது படுத்த வேண்டிய அவசியமும் இல்லை அவரிடம் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் எளிமையான ரசிகர்கள் தான்

Related Posts

View all