போனி கபூர் தரமான தயாரிப்பு.. இந்த படம் சம்பவம் பண்ணும்.. ஹாட் ஜான்வி கபூர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Janhvi kapoor latest video viral

இந்திய சினிமாவை பொறுத்தவரை survival த்ரில்லர் படங்கள் வருவது மிகவும் அரிது. அந்த மாதிரி படங்கள் இனிமேல் வந்தால் கண்டிப்பாக அது பான் இந்தியா படமாக இருக்கவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள். இந்த மிலி படம் மலையாளத்துல ரிலீஸ் ஆன ஹெலன் படத்தின் ரீமேக், அந்த படத்தை முதலில் தமிழில் அன்பிற்கினியால் என்ற தலைப்பில் எடுத்தாங்க. இப்போ அதே படத்தின் ரைட்ஸ் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி அவர் பொண்ணையே நடிக்க வைத்திருக்கிறார். இந்த படம் மூலம் ஜான்விக்கு கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும்.

இந்த படத்தின் கதையை படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே இதுதான் நடக்க போகிறது என்று ஒரு எறும்பு மூலமே கதை சொல்லிருப்பாரு இயக்குனர். அது தான் இந்த கதையை பொறுத்தவரை ஒரு பிரில்லியண்டான சம்பவம் என்று சொல்லலாம். ஆனால் இந்த விஷயம் படம் பார்த்து முடித்த பின்னர் யோசிக்கும்போது தான் நமக்கு தெரியும், அடடே என்ன மாதிரி யோசிச்சிருக்காருன்னு. அதுமட்டுமல்லாமல் அது போல சம்பவம் நம் வீட்டில் கூட நடந்திருக்க வாய்ப்புண்டு.

ஜான்வியை பொறுத்தவரை அவங்க இந்த ரோலுக்கு தரமா பொருந்துவாங்க, ஏனென்றால் பெரிய ஹெரோஇன் நடிச்சு தாங்குகிற அளவுக்கு பெரிய கதை இல்லை. ஆனால் சர்வைவல் த்ரில்லர். கடைசி வரை அய்யோ அடுத்து என்ன நாடாகும் எப்படி அந்த பெண்ணை ரீச் பண்ணுவாங்க, நடுவானுல காதலன் வேற, அவங்க அப்பா பதற்றம் எல்லாமே பார்க்கிறவர்களை பரபரப்பாகவே வெச்சிருப்பாங்க. அழகான ஒபெநிங் 15 நிமிடத்தை மிஸ் பண்ணிட வேண்டாம் எப்போது படம் பார்த்தாலும்.

ஜான்விக்கு இந்த படம் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் கிடைக்கும், மினிமம் கேரண்ட்டி கண்டிப்பாக இருக்கும் இவய்ங்க படங்களுக்கு இனிமேல். ஏனென்றால் சமீபத்தில் நடித்து வெளிவந்த எல்லா படங்களும் தரமான படங்கள்.

Video:

Related Posts

View all