ஜான்வி அப்டியே ஸ்ரீதேவியை உருச்சு வெச்ச மாதிரி இருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
பாலிவுட் நடிகைகளில் அடுத்த ஜெனெரேஷன்-ல் பெரிய சூப்பர்ஸ்டாரை வரும் தகுதி ஸ்ரீதேவி-போனி கபூர் பொண்ணு ஜான்விக்கு இருக்கு. இவங்க அதற்கு எல்லா தகுதியும் இருக்கும் நடிகை தான். இவங்க அது கிடைக்க கொஞ்சம் கடுமையா உழைக்க வேண்டும். உழைப்பு என்பதை தாண்டி நல்ல படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.
அயோ இயக்குனர் கதை சொல்லி விட்டாரே நம்ம போய் படம் பண்ணலாம் என்று இருந்தால் மிகவும் பின்னோக்கி தான் போவாங்க. ஏற்கனவே அவங்க அம்மா ஒரு லெஜெண்ட் நடிகை. அவங்க பெயரை வேற காப்பாற்றணும், அந்த பொறுப்பு ஜான்விக்கு இருக்கு. ஒரு நல்லது கெட்டது ஹெல்ப் பண்ண அவங்க அம்மா வேற கூட இல்லாதது வருத்தம்.
அம்மா அப்படியொரு லெஜெண்ட் நடிகை என்று இருக்கும்போது, இந்த ஸ்டார்கிட்ஸ்க்கு வரும் பிரச்னை என்னவென்றால் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவங்க அம்மா அளவுக்கு இல்லை என்று வாய் கூசாமல் சொல்லிட்டு போய்டுவாங்க. நடிகை ஸ்ரீதேவி இந்தியாவின் கனவுகன்னியா இருந்தவங்க. 100 படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகை.
ஜான்விக்கு மண்டையில் பாருங்க அவ்வளவு பெரிய பாரம். ஆனால் ஜான்விக்கு கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் அவங்க பார்க்க லைட்டா ஸ்ரீதேவி மாதிரியே இருப்பது தான். அது முகத்தில் அப்படியே தெரிகிறது. அதனால் கண்டிப்பா பெரிய இடத்துக்கு வருவாங்க. இப்போ பாலிவுட்டில் அவங்க கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது.