இந்த படத்தை பார்த்துவிட்டு அவர் சொன்ன விஷயம் "ஆண் குஞ்சுகள் பார்க்க வேண்டிய திரைப்படம்.." முழு விவரம்.

Jaya jaya jaya hey movie update

பொதுவாக ஒரு படம் நன்றாக இருந்துவிட்டால் அந்த படத்தை பற்றிய பேச்சு பரவலாக சென்று எல்லாருடைய காதுகளிலும் விழும். மொழி பிரச்னை எல்லாம் இருக்காது காரணம் இப்போது subtitles எல்லாம் வெச்சே படத்தை பார்த்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ஒரு படம் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் இது. அந்த படத்தை பற்றி இயக்குனர் வசந்தபாலன் என்ன சொல்லிருக்காரு பாருங்க.

படப்பிடிப்பு வேலை பளுஉஉ காரணமாக Jaya Jaya Jaya Jaya hey திரைப்படத்தை இன்று தான் கண்டேன். லட்சக்கணக்கான சீரியல்கள் சொல்லாத கோணத்தில் தினமும் நம் வீடுகளில் நடக்கிற எளிய வலிமிக்க கதையை எத்தனை நுண்ணிய விவரணைகளுடன் இந்த திரைப்படம் சொல்கிறது. நம் வீடுகளில் பெண் வதைபடுவதைப் பார்த்திருக்கிறேன்.

Jaya jaya jaya hey movie update

பெண் குடும்பத்தினர் “பொறுத்துப்போம்மா. அப்பாக்கு வேறு வயசாயிடுச்சு..அப்பாக்கு தெம்பிருந்தா அவன ரெண்டு அடி அடிச்சிருப்பேன் " என்ற சொல்கிற குரல்களை கண்ணீர் மல்க கேட்டிருக்கிறேன். ஆணாதிக்க புள்ளிகள் போட்ட கோலங்களுடன் தான் நம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை எத்தனை முறை படிப்பது? எத்தனை முறை படிக்க சொல்வது.? நம் பாடத்திட்டத்தில் இருக்கிறதா ? மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் இந்த படம் தம் குழந்தைகளுக்கு கராத்தே கற்று கொடுக்கச் சொல்லித் தரும். அவசியம் மீசை வைத்த அல்லது மீசை வழித்த ஆண்கள், மீசை வளரா ஆண் பிள்ளைகள், ஆண் குஞ்சுகள் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இயக்குனர் வசந்தபாலன் தற்போது அநீதி என்ற படத்தை அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயனை வைத்து எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் என்று நினைக்கிறோம். இந்த படம் இயக்குனராக இவருடைய முரட்டு comeback ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Posts

View all