இவரு ஒருத்தர் தான்யா வித்தியாசமா பண்றது.. இறைவனாக ஜெயம் ரவி. மிரட்டல் லுக் வைரல்.
ஒரு கதாநாயகன் தனக்கு கொடுத்த ரோல் மட்டும் இல்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறான் பாருங்க அவன் ரொம்ப பெரிய இடத்துக்கு வருவான். இப்போ தமிழ் சினிமாவில் ரொம்ப வித்தியாசமான கதைக்களத்தை செலக்ட் செய்து நடிக்கும் நடிகர்கள் இரண்டே பேர். ஒருத்தர் கார்த்தி, இன்னொருவர் ஜெயம் ரவி. இவங்க இரண்டு பேர் தான் அடுத்த ஜெனெரேஷன் சூப்பர்ஸ்டார்ஸ்.
இவங்களோட சினிமா வாழ்க்கையே அப்படியே அமைஞ்சிடுச்சு. இவங்க தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அவங்களோட முந்தைய படத்துக்கு ரொம்ப வித்தியாசமா தான் இருக்கும். அதுக்கே இவங்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆப். கொடுக்கலாம். பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் கார்த்தி சர்தார்ன்னு ஒரு ஹிட் கொடுத்துட்டார்.
ஜெயம் ரவிக்கு இரண்டு படம் ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கு. ஒன்னு அகிலன், இன்னோன்னு இறைவன். இந்த இறைவன் படத்தை இயக்கும் இயக்குனர் அகமத். ரொம்ப தரமான இயக்குனர். இவர் எடுத்த இரண்டு படமும் செம்ம ஹிட். ஒன்னு மனிதன், இன்னோன்னு என்றென்றும் புன்னகை. அதனால் தான் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம்.
ரொம்ப நாளா இந்த படத்தை பற்றிய அப்டேட் தான் கேட்டுட்டு இருக்காங்க. சரியான நேரத்தில் நேற்று பொங்கல் திருநாளில் அரிச்சிருக்காங்க. இந்த படத்தின் நாயகி நயன்தாரா. அந்த போஸ்டர்லையே நயன்தாரா இருக்காங்க. பசங்க தேடி கண்டுபுடிச்சுட்டாங்க. நீங்களும் ஜூம் பண்ணி பார்த்து எங்க இருக்காங்க என்று கண்டுபுடிச்சு கமெண்ட் பண்ணுங்க.
Jayam Ravi Tweet:
#Iraivan First Look 🙏🏼🙂 pic.twitter.com/vnQeRGIkzU
— Jayam Ravi (@actor_jayamravi) January 15, 2023