என்ன படம் இது ஜெயம் ரவி கூட இத்தனை பெண்கள். அடுத்தடுத்து மேலே மேலே போயிட்டே இருக்காரு. முழு விவரம்.
ஜெயம் ரவி அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சமீப காலத்தில் நல்ல படமா கொடுத்துட்டு இருக்காரு. அதுவும் பொன்னியின் செல்வன் படம் வந்ததுக்கப்புறம் இவரோட range வேற லெவெலில் போய் விட்டது. ஜெயம் ரவிக்கு மைனஸ்ஸே அவரோட வாய்ஸ் தான், அவர் எப்படி அருண்மொழி வர்மன் ஒரு அரசன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்ற விமர்சனம் எல்லாம் வந்தது, ஆனால் படத்தில் சைலன்ட் சம்பவம் அவர் பண்ணினது தான்.
தற்போது அவர் அகிலன் படத்தின் ரிலீஸ்காக காத்துக்கிடக்கிறார். டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். உடம்பே கொஞ்சம் போட்டிருப்பார் போல. ஏனென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபுறம் இருக்க ஜெயம் ரவி அவரோட அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். இதுமட்டும் இல்லாம ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகன் கூட ஒரு படம் பண்ணிட்டு இருக்காரு. அது தான் அவரின் 30வது படம்.
இந்த சைரன் படகில் நாயகிகளாக அனுபமாவும், கீர்த்தி சுரேஷ் ரெண்டு பெரும் நடிக்கிறாங்க. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கவுள்ளார். எல்லாமே சரி, என்ன ஒரு விஷயம் இடிக்குது என்றால் இவர் தான் இயக்குனர் சிவா வோட அசிஸ்டன்ட் கதை டிஸ்கஷன்-ல பணிபுரிந்திருக்கிறார். அதுவும் அண்ணாத்தே, வேதாளம் போன்ற படங்களுக்கு. இந்த விஷயம் தான் கொஞ்சம் நம்மை பதறவைக்குது.
கதை நல்லா இருக்கும் பட்சத்தில் அது பிரச்னை இல்லை. கதை மட்டுமல்ல திரைக்கதை ரொம்ப முக்கியம். கதை நல்ல இல்லை என்றால் கூட, திரைக்கதையால் ஜெயித்த படங்கள் நிறைய உண்டு. இந்த படம்மும் பெரிய சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த படம் நேற்று காரைக்காலில் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.
#SIREN Shoot Starts From Today⭐
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 9, 2022
Stars : Jayam Ravi - Keerthy Suresh - Anupama Parameswaran - Yogi Babu - Samuthirakani
Music : GV Prakash
Direction : Antony Bhagyaraj (Viswasam & Annaatthe Writer)
Shoot Starts At Karaikal✌🏽 pic.twitter.com/zHC9YoGdKG