சொல்லி நடிச்சிருக்காரு கார்த்திக் சுப்பாராஜ்.. கடைசியில் அந்த BGM.. SJ சூர்யா, லாரன்ஸ் கொல மாஸ். ஜிகர்தண்டா வீடியோ வைரல்.
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடிக்கும் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. படத்தின் முன்னோட்ட வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கின்றனர், சும்மா மிரட்டி விட்டிருக்காரு கார்த்தி. ஜிகர்தண்டா படம் பார்த்த பின்பு தமிழ் சினிமாவில் இப்படியொரு gangster படம் வருமா என்று காத்துக்கிடந்தனர் ரசிகர்கள். திரும்பியும் அதைவிட டபுள் X ஆகா நானே எடுக்கிறேன் என்று எடுத்துள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.
எல்லாருமே SJ சூர்யாவை வில்லனா பார்த்தபோது, கார்த்தி மட்டும் ஹீரோவா பார்த்திருப்பார் போல. எல்லாரும் ஹீரோவா பார்க்கப்படும் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் வில்லன். இதுவே ரொம்ப பிரெஷா இருக்கு. இதை பார்க்கும்போதே ஒரு கிளைமாக்ஸ் காட்சி போல இருக்கிறது, இதற்கு பின்னர் தான் மற்ற காட்சிகளை சுட பண்ணுவார் போல. கண்டிப்பா பெரிய சம்பவம் லோடிங் என்று சொல்லலாம்.
படத்தின் நாயகி நிமிஷா சஜயன், கேரளா லேடி கமல்ஹாசன் என்று சொல்லலாம். ரொம்ப கன்டென்ட் படங்கள் மட்டுமே பண்ணுவாங்க, பிரமாதமான நடிகை. இவங்க தமிழில் எல்.விஜய் இயக்கும் அருண் விஜய் நடிக்கும் படத்தில் அறிமுகம் ஆகறாங்க, இப்போ ஜிகர்தாண்டா 2 படத்திலும் கம்மிட் பண்ணிருக்காரு கார்த்தி, அவங்க ரோல் செம்ம ஸ்ட்ராங்கா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் அவங்களை சூஸ் பண்ணி மொக்க ரோல் கொடுத்தா செட் ஆகாது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படம் பீரியட் படம் என்று நினைக்கிறோம், அந்த காலத்து ஜீன்ஸ், சிகரெட் தான் வாயில் வைத்திருக்கிறார் எஸ்ஜே.சூர்யா. ஆனால் ஒன்னு மட்டும் சோழனும் இரண்டு பேருடைய கெட்டப்பும் சும்மா மிரட்டுகிறது. கேமெராமேன்க்கு பெரிய பாராட்டு தெரிவிக்கும். மேலும் இந்த படத்தின் டைட்டில் வரும்போது ஒரு BGM வரும் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு கூஸ்பம்ப்ஸ் வரும்.
Video: