கார்த்திக் சுப்புராஜ் சம்பவம்.. ஜிகர்தண்டா 2 மிரட்டி வெச்சிருக்காரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jigarthanda 2 teaser video

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் டீசர் வெளியானது. இப்படி தீயா இருக்கும் மேக்கிங் என்று கனவில் கூட நினைக்கவில்லை. பீரியட் படம் என்று சென்று விட்டாலே படத்தில் வரும் காட்சிகள் தான் மக்கள் மனதில் பெரியளவு பதியவேண்டும். இந்த படம் அதை சரியா செய்யும் என்று நம்புகிறோம்.

இப்போ இது காங்ஸ்டர் காலம். வரும் படங்கள் எல்லாம் ரத்தம் தெறிக்க தெறிக்க தான் இருக்குது. மக்களே பீல் பண்ணிட்டாங்க என்னடா ஆச்சு தமிழ் சினிமாவிற்கு என்று. இதுவரை வந்த காங்ஸ்டர் படங்களிலேயே ஒரு வித்தியாசமான காங்ஸ்டர் படம் என்றால் கண்டிப்பா அது ஜிகர்தாண்டா தான்.

Jigarthanda 2 teaser video

அப்படியொரு முதல் பாதி வெச்சுட்டு இரண்டாம் பாதியில் காமெடியில் ஸ்கோர் பண்ணினது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம். முதல் பக்கம் என்ன சொல்லுச்சோ அதே கதை தான் இரண்டாம் பாகத்திலும். ஆனால் இயக்குனர் இதில் என்ன வித்தியாசம் பண்ண போகிறார் என்பதில் இருக்கு ஆச்சர்யம். இயக்குனராக SJ சூர்யா, மற்றும் வில்லனாக ராகவா லாரன்ஸ்.

கார்த்திக்கிட்ட இருக்கும் முக்கியமான ப்ளஸ் அவருடைய மேக்கிங் மட்டும் கதையை கடைசி பிரேம் வரை எடுத்துட்டு செல்வது தான். எதாவது ஒரு ட்விஸ்ட் வெச்சிருப்பார் கடைசில. அதை என்ஜாய் பண்ணிட்டு வர்ற மாதிரி இருக்கும். இந்த படத்தில் கதையே தெரிஞ்சிருச்சு அதில் என்ன வித்தியாசம் என்று தான் தெரியவில்லை. தீபாவளி மிரட்டல் தீபாவளியா இருக்கப்போகுது.

வீடியோ:

Related Posts

View all