சர்பட்டா வேம்புலி தானே இது. செம்ம ரொமான்ஸ் மூடில் இருக்காரு. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - திமுக தலைவர் கருணாநிதி எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என்று பாராட்டினார் தமிழ் மக்கள்.
கபிலனாக அசத்தியுள்ள நண்பர், கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ், வேம்புலி, ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்த பா.ரஞ்சித்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிசா காலத்து திமுக வரலாற்றை வடசென்னை மக்களின் வாழ்வியலோடு படமாக்கியது புதுமை. அன்று நாடே இந்திரா காந்தியிடம் பணிந்துகிடந்த போது எதிர்த்து நின்ற ஒரே மனிதர் கலைஞர் என்ற உண்மை அனைவர்க்கும் தெரிந்தது. திமுகாரனுக்கு கருப்பு சிவப்பு துண்டு தான் எல்லாம் அது தான் கெத்து, அதை படத்தில் சரியாக காண்பித்து உள்ளார்கள்.
அந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாருக்கும் நற்பெயர் கிடைத்தாலும், அந்த படத்தில் நடித்த ஜான் கொக்கன் அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். சர்பட்டா படத்துக்கு பின் KGF 2 படத்தில் நடித்தார். தற்போது அஜித்துடன் துணிவு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் போட்ட ஒரு கமெண்ட் செம்ம வைரல். காரணம் துணிவு படத்தில் அஜித்துக்கு பின் இவர் தான் இரண்டாவது கதாநாயகனாம். மேலும் வில்லனாகவே நடித்து வந்த இவருக்கு இந்த படத்தில் பாசிட்டிவ் ரோல் என்று கூறியுள்ளார்.
இவர் சமீபத்தில் இரண்டாவதாக நடிகை பூஜாவை திருமணம் செய்து கொண்டார். அவங்க இரண்டு பெரும் இப்போ ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கப்போகுது. செம்ம போட்டோஷூட் பண்ணி அதை confirm பண்ணிருக்காங்க. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.
Latest Photos: