தலைவர் ரஜினியை போல அப்படியே நடந்து அசத்திய காந்தாரா ஹீரோ ரிஷாப் ஷெட்டி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கோடிக்கணக்கான ஆண்டுகள் உருவான இந்த மண்ணின் கதை… கடவுளே மனிதன்; மனிதனே கடவுள் எனும் தத்வமஸி நிலை… தமிழ் அவதார்… இசை, நடிப்பு, திரைக்கதை என ஒவ்வொன்றிலும் பின்னி பெடல் எடுத்திருக்கும் #காந்தாரா பார்த்தேன், சிலிர்த்தேன்… அடேயப்பா… அற்புதம்.
மொழிகளைத் தாண்டியது கலை என்பதற்கு இன்னொரு உதாரணம்… தவற விடாதீர்கள் இந்த படத்தை I mean இந்த அனுபவத்தை என்று படம் பெரிய ளவு பார்க்காத ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் ட்வீட் செய்தது இந்த படம் எப்படி மக்களை influence செய்திருக்கிறது என்ற நினைத்து பார்த்தாலே, வார்த்தைகளால் அதை நிரப்ப முடியாது. ஹிட் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் ஆகியுள்ளது.
காந்தாரா🔥வெற்றிகரமாக திரையரங்குகளில் இப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது ஆங்காங்கே, காணத்தவறாதீர்கள்! ஒரே படத்தில் ஓஹோ என்று வாழ்க்கை என்ற பழமொழி ஊன்று. அது தற்போது கன்னட கதாநாயகர்களுக்கு சமீப காலமாய் நடந்து வருகிறது. யாஷ் KGF படம் மூலம், ரிஷாப் ஷெட்டி இந்த படத்தின் மூலம். சூப்பர்ஸ்டார் ரஜினி எப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் நாயகனான ரிஷாபை அழைத்து பாராட்டினாரோ, அப்போதே படம் பெரிய வெற்றி.
இண்டியயெங்கும் இன்னும் காந்தார பீவர் அடங்கவில்லை. அந்த கதாநாயகனை அழைத்து சிறப்பு விருந்தினராக பல சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அப்போது இவர் சமீபத்தில் சூப்பர்ஸ்டாரை சந்தித்ததால் அவரை போல நடக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு சற்றும் தயங்காமல் சிவாஜி படத்தில் வரும் ரஜினி போல மாஸாக நடந்து காட்டுயுள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
Video:
Rishab Shetty Imitates Superstar 💥 pic.twitter.com/3TFkDrbcud
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 14, 2022