இது என்னடா 2064ல் நடக்குற மாதிரி கதையா?? வித்தியாசமா இருக்கே.. கலியுகம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு சில இயக்குனர்கள் எல்லாம் நல்ல கதையை வைத்துக்கொண்டு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் சுத்திட்டு இருக்கிறவங்க பல பேர் இருக்காங்க. முதல் படமே ரொம்ப வித்தியாசமா பண்ணனும் என்று சாதிச்சவங்களும் இருக்காங்க, முதல் படத்தோடு காணாமல் போனவர்களும் இருக்காங்க. ஆனால் காணாமல் போனவர்கள் என்னிங்கை தான் அதிகம்.
இப்போது மீண்டும் ஒரு புது முயற்சியாக கலியுகம் என்ற படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கிறது. பொதுவாக கலியுகம் என்பது ஒரு கற்பனை என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்க படுகிறது. இதை சற்று அலசலாம். இப்பொழுது 5124 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் கலியுகம் 2023-5124 = -3101 தொடங்கியது. அதாவது 3102 கி. மு.
பல நாடுகளில் கடுமையான பஞ்சம், பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை என்பது போல பல புகைப்படங்கள் பார்த்திருக்கிறோம். சில நாடுகள் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த புகைப்படங்கள், வீடியோ எல்லாம் ஒரு படமாக பார்த்தால் எப்படி இருக்கும், அப்படிதான் இருக்கிறது இந்த படத்தின் ட்ரைலர். நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிச்சிருக்காங்க, கிஷோர் முக்கியமான ரோல் பண்றாரு. இயக்குனர் எப்படி இந்த படத்தை ஆரம்பித்து எப்படி முடிப்பார் என்பதில் இருக்கிறது ஆச்சர்யம். படத்துக்காக மரண waiting.
Video: