மீண்டும் ரெண்டு பேரும் ஜோடியா.. ஆனா இந்த தடவை வேற மாதிரி. கள்வன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kalvan movie update

நாச்சியார் படம் மூலம் தான் இவானா தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். பாலா தான் கேரளால இருந்து கூப்பிட்டு வந்திருக்காரு. அந்த படத்திலேயே பயங்கர பெரிய ரோலு அவங்களுக்கு. அது மட்டுமில்லாம மைனர் பொண்ணா நடிச்சிருப்பாங்க. சும்மா சீன்ஸ் எல்லாம் அப்போவே பிரிச்சு மேஞ்சிருப்பாங்க. ஜோதிகா தான் அந்த படத்தின் ஹீரோ.

நம்ம ஜிவிக்கு மிகவும் வித்தியாசமான படம் என்றால் அந்த படம் தான். அதில் அவர் நடிப்பில் முத்திரை பாதிச்சிருப்பாரு. பாலா படமாச்சே நடிக்காம விட்ருவாரா? சமீபத்தில் பாலா எடுத்த சில படங்களில் இந்த நாச்சியார் படம் தான் தரமான படம். இப்போது வணங்கான் படத்தை எடுத்து வருகிறார்.

Kalvan movie update

இயக்குனர் பாரதிராஜா இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் சாதித்து வருகிறார். அவர் ஒரு படத்தில் இப்போது இருக்கிறார் என்றாலே அது தரமான படமாக மாறி விடுகிறது. ஏனென்றால் அவர் இயக்குனர் அல்லவா அதனால் அவரை இயக்கும் இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது அவருக்கு தெரிகிறது, அதனால் அவர் சரியாய் அதை கொடுத்து விடுகிறார். காமெடியோ, சீரியஸ் ரோலோ, எது பண்ணினாலும் சம்பவம் பண்றாரு.

தற்போது கள்வன் என்ற படத்தில் ஜிவி கூட சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வையை விட்டது நம்ம தனுஷ். இதை விடும்போது அவர் அதற்கு கொடுத்த caption தான் சூப்பரா இருக்கு. பிரபு சாலமன் படம் போல இருக்கிறது. ஏனென்றால் காடு, மலை, யானை எல்லாம் அவர் தோட்ட சப்ஜெக்ட். இந்த படத்தில் அவர் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதில் இருக்குது surprise.

Video:

Related Posts

View all