எனக்கு வாழ்க்கை ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கு.. ப்பா சும்மா மிரட்டி வெச்சிருக்காங்க. கள்வன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Kalvan teaser video viral

இதுவரை தமிழ் சினிமாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு வந்த நிறைய படங்கள் வெற்றி படங்கள் தான். அந்த வரிசையில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாடம் போல இருக்கும். பூர்வ குடிமக்களான மலைவாழ் மக்களின் துயரங்களைப் பேசிய படம் பேராண்மை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது அதிலுள்ள உள் கருத்துக்களை நாம் புரிந்து கொண்டால் நமக்கு இயற்கை வளங்கள் அது சார்ந்த மக்கள் எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

சமீபத்தில் வெளிவந்த ஒரு படம் இது. மலை வாழ் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் விளக்கிய திரைப்படம் #தேன். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பிற்போக்குத்தனத்தாலும் மலைவாழ் மக்கள் படும் துயரங்களை எடுத்துரைத்த படம். இந்த படத்தின் நாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இந்த படம் பார்க்குமாறு இணையதளத்தில் கோரிக்கை விடுத்தார். பார்த்தாரா என்று தெரியவில்லை.

Kalvan teaser video viral

மலைவாழ் மக்கள் தாங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வசித்த இடங்களில் இருந்து இடம்பெயர்த்து அவர்களை இடம் பெயர்த்து வெளியேற்ற அரசாங்கங்கள் இடும் சட்டங்களுக்கு நியாயமாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்படும் நடைமுறை சிக்கலை வலிகளுடன் ஆழமாக எடுத்துரைத்த படமாக இந்த கள்வன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படகுக்கு இசை ஜிவி தான். இவருடன் பாரதிராஜா, இவானா, தீனா ஆகியோர் சப்போர்டிங் ரோலில் நடிச்சிருக்காங்க. எப்போவும் மலைவாழ் மக்கள் பற்றிய படங்கள் என்றாலே கொஞ்சம் attention கிடைக்கும். இந்த படம் இந்த ட்ரைலர் மூலம் எதோ ஒரு விஷயம் சொல்ல துடிக்கிறது. ஜிவி அந்த ரோலுக்கு சூப்பரா சூட் ஆவாராரு. இந்த படம் சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கிறோம்.

Video:

Related Posts

View all