கமலின் 234வது படம் மணிரத்னம் பண்றாரு.. 232 விக்ரம். அப்போ 233? சம்பவகாரன் தான் இயக்குனரு. முழு விவரம்.

Kamal next movie update

உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் திரைப்படங்களில் செம்ம பிசி ஆயிட்டாரு. அவர் கலைத்தாயின் மகனுங்க அவர் பிசி ஆகவில்லை என்றால் தான் நாம் ஆச்சர்யப்படணும். இதற்கு எல்லாம் காரணம் விக்ரம் படம் தான். இதுவரை கமல் படங்களில் இல்லாத அளவுக்கு வசூல் சாதனை. அவரோட தயாரிப்பு நிறுவனமான RKFIக்கு அப்படியொரு profit இதுவரை வந்ததில்லை, அதனால் செம்ம குஷியில் இருக்காரு.

profit/லாஸ் எல்லாம் சினிமாவில் சகஜம் தான். இப்போ இந்த படம் 400 கோடி வசூல் பண்ணிருக்கு. கிடைத்த லாபத்தை அவர் மீண்டும் சினிமாவில் தான் போடுவாரு. இன்னும் நாலு நல்ல படங்களை தயாரிப்பாரு. அப்படியிருக்க அவரோட லைன்-அப். சமீபத்தில் அவரோட பிறந்தநாளை கொண்டாடினார் கமல். அப்போது இவரின் அடுத்தடுத்த படங்களை பற்றின அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் இப்படி ஒரு அறிவிப்பு சத்தியமா எதிர்பார்த்திருக்கமாட்டாங்க.

Kamal next movie update

234வது படம் மணிரத்னம் கூட, 2024ல் ஷூட்டிங் ஆரம்பித்து இறுதியில் வெளியாகும் அல்லது 2025 முதல் பாதியில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 35 வருடத்திற்கு பின் இவர்கள் இருவரும் சேர்வதால் இப்போ இருந்தே அந்த படத்துக்கான hype உருவாகிருச்சு. இப்போ இவரின் 233 படத்தின் update நமக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குபவர் துணிவு இயக்குனர் எச்.வினோத், இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.

இந்த படம் ஒரு quickie என்று சொல்லப்படுகிறது. கமலுக்கு அடுத்த வருடம் இரண்டு ரிலீஸ். ஒன்று இந்தியன் 2 இன்னொன்னு இந்த 233வது படம். இதில் காமலுடைய காதாபாத்திரம் தான் அனைவரையும் surprise செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Posts

View all