அரசியல் படம்.. உலகநாயகனின் அடுத்த சம்பவம்.. ரைஸ் டு ரூல்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உலகநாயகன் கமல்ஹாசன் இப்போ அவரை ரொம்ப பிசியா வெச்சுகிட்டு இருக்காரு. ஒரு மனிதனுக்கு அவங்களை ரொம்ப பிசியா வெச்சுக்க வேண்டியது கடமை. அப்படியிருந்தால் உடம்பில் எந்த நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பது தாழ்மையான கருத்து. சினிமா என்பதால் நிறைய காசு வருது அதனால் நடிக்கிறார் என்று சொல்லவேண்டாம்.
அது அவருக்கு தொழில். தற்போது முக்கியமான விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே ஒரு டீசர் வெளியில் வந்தது அது கமலின் 234வது படத்தின் அறிவிப்பு. யார் 233வது படம் எடுக்கப்போறாங்க என்று நாம் முன்னாடி ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அது நிஜம் ஆகிவிட்டது. இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார்.
உலகநாயகன் தற்போது அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார், படங்களிலும் நடிக்கிறார். அவர் வயதுக்கு இரண்டும் மேனேஜ் பண்ணுவது கடினம் என்றாலும் செய்யறாரு. எச். வினோத் அரசியல் படங்கள் எடுப்பதில் கில்லாடி என்று தான் சொல்லவேண்டும், அதுவும் கமல் போன்று ஒரு நடிகர் கிடைத்தால் சம்பவம் தான்.
இந்த அறிவிப்பு டீஸரே கொஞ்சம் hype கொடுக்கிறது. அதுவும் அந்த படத்தின் tagline கதை சொல்லுது. ரொம்ப ரொம்ப பவர்புல்லான tagline. rise to rule என்பது சும்மா வாக்கியம் இல்ல. ஒரு சாதாரண மனிதனின் எழுச்சி என்று கூட சொல்லலாம். கொஞ்சம் கம்யூனிஸ்ட் வாடை அடிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
Latest Video:
And it begins…#RKFI52 #KH233
— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE