❤️❤️ Manjummel Boys ❤️❤️ மனிதன் கண்டுபிடித்த உன்னதமான கருவி சினிமா. முழு விவரம் உள்ளே.

Kamalhaasan manjumel boys update

உண்மையான கலை. ரொம்ப ரொம்ப ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது. உன்னதமான படைப்பு. கத்த தோன்றியது, கைதட்ட தோன்றியது, புல்லரித்தது, இதயத்தை ஏதோ செய்தது. மனிதன் கண்டுபிடித்த உன்னதமான கருவி சினிமா.

மலையாள சினிமா இந்தியாவின் உச்சம். அடுத்து தான் தமிழ் சினிமா(தெலுங்கு எல்லாம் லிஸ்ட்லயே இல்ல) குறைந்த பட்ஜெட்டில், எளிமையான அதேநேரம் வலிமையான கதையை வைத்து பிரமாண்டமான கலையை படைக்கிறார்கள். நெகிழ்ந்து போனேன்.

கமல் சினிமாவில் அரசன், அறிஞன், கலைஞன். யாருமே போகாத குணா குகையில் 33 வருஷத்துக்கு முன்னே படமெடுத்து, அதை மற்றவர்கள் 2024லிலும் connect செய்கிறார்கள் என்றால் கமலின் அறிவை ஆற்றலை தேடலை மெச்ச வேண்டும். லவ் யூ கமல் உலகநாயகன் கமலஹாசனே.

Kamalhaasan manjumel boys update

தெய்வ இசையை வழங்கும் இசைஞானியின் “உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போகும் மாயமென்ன” எனும் இசை வரும்பொழுது கண்கள் கலங்கின. இசை உயிரின் வேர் வரை பாய்கிறது. லவ் யூ இசைஞானி இளையராஜா.

படம் நீளம் இல்லை. ஒரு சீன் கூட போர் அடிக்க வில்லை. திரைக்கதை சமீபத்தில் பார்த்த மிக சிறந்த திரைக்கதை. இந்த படத்திற்கெல்லாம் ஒரு 50 பக்கம் விமர்சனம் எழுதலாம். கலையை மதித்திருக்கிறார்கள், காதலித்திருக்கிறார்கள்.

இயக்குனர் சிதம்பரம், நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். எல்லா தேசிய விருதையும் கொடுத்துவிடுங்கள். ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பாக அனுப்புங்கள்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ❤️ இந்த படம் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம். பாருங்கள். இன்புறுங்கள்.

#ManjummelBoys

Video:

Related Posts

View all