என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார்- கமல். வீடியோ வைரல்.

Kamalhaasan video viral campaign

நான் விஸ்வரூபம் படம் எடுத்த போது என்னை தடுமாறு வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார்

அப்போது கலைஞரும், ஸ்டாலினும் எனக்கு உதவ முன்வந்தனர்

அது என் பிரச்சனை என்பதால் நான் மறுத்துவிட்டேன்,இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளேன்

-தேர்தல் பரப்புரையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு.

ஏன் ஜெயலலிதா இருக்கும்போது இதை சொல்லவில்லை என்று உலகநாயகனை விமர்சித்த ஒரு சிலருக்கு, மக்கள் நீதி மய்யத்தினரின் பதில்: அம்மையார் அரசை எதிர்த்து அம்மையார் இருக்கும் போதே வழக்கு தொடர்ந்து வெற்றியும் கண்டவர். அப்ப சுயநலத்திற்காக எதிர்கட்சி ரசிகர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை. இன்று சுயநலத்திற்காக கூட்டணி இல்லை. மக்கள் நலனுக்காக கூட்டணி என்பதை சொல்வதற்கு உதாரணமாக அதை குறிப்பிட்டார்.

Kamalhaasan video viral campaign

மொத்த திரையுலகமும் அந்தம்மாவை போய் பாருங்க உங்க பிரசனைகளை தீர்த்து வைப்பார் என்று சொன்ன போது தன்மானத்தை விட்டு அந்த அம்மையார் வீட்டு வாசலை மிதிக்காமல் நீதிமன்ற வாசலை மிதித்து நீதியால் அந்த அம்மையாரின் சர்வாதிகாரத்தை வென்றவர் கலைஞருக்கு பிறகு துணிச்சோலோடு அம்மையாரை ஒரே மனிதர் இவர்.

அதிமுகவினர் பதில்: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்ததாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம்.

இஸ்லாமியர்களுக்காக என்றும் அதிமுக துணை நிற்கும் என்பதை ஈரோடு வாழ் இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டிய ரெட்ஜெயன்ட் கம்பனி நடிகராகவும்-திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராகவும் மாறிவிட்ட முன்னாள் மய்ய தலைவருக்கு நன்றி.

வீடியோ:

Related Posts

View all