சந்திரமுகியா கங்கனா.. சும்மா பிரிச்சு மேய போறாங்க... ஷூட்டிங் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
1982ம் ஆண்டு வெளியான #பயணங்கள்முடிவதில்லை படத்துக்கு பிறகுசென்னை சிட்டியில் 2 தியேட்டரில் 275+நாட்கள் ஓடிய படம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி.
பயணங்கள் முடிவதில்லை ஓடிய அந்த 2 தியேட்டரிலும் அந்த படம் ரிலீஸானதே பகல்காட்சியில் தான் என நினைவு சந்திரமுகி சாந்தி தியேட்டரில் 4 காட்சிகளாக 220 நாள் வரையும் பின்பு பகல்காட்சியில் 275+நாள் தாண்டியது.
இன்னொரு திரையரங்கமான அபிராமி வளாகத்தில் 161 நாட்கள் வரை 3 காட்சிகளில் ஓடி பின்பு பகல்காட்சியில் 275+நாள் தாண்டியது. தமிழ் திரைப்பட வரலாற்றில் தமிழ்நாடெங்கும் 90 தியேட்டரில் 100 நாள் ஓடிய ஒரே படம் சந்திரமுகி மட்டுமே. 1996 இல் வெளியான உலக நாயகனின் இந்தியன் திரைப்படத்தின் தென்னிந்திய வசூல் சாதனை ஒன்பது வருடங்களுக்குப் பிறகுதான் சந்திரமுகி வந்து முறியடித்தது.
அப்படி பல பெருமைகள் உண்டு இந்த சந்திரமுகி படத்துக்கு. அப்படிப்பட்ட படத்தில் தான் இப்போது லாரன்சும், கங்கனாவும் நடிக்கின்றனர். இந்த படமும் அந்த படம் போல பெரிய கிட் ஆகும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது. இயக்குனர் பி.வாசு எப்படி எடுக்கப்போகிறார் இந்த காலத்து ட்ரெண்ட் எல்லாம் பாலோ பண்ணுவாரா என்று தெரியவில்லை.
பிளாஸ்பேக் portionல மட்டும் தான் கங்கனா வருவார் போல. தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் போட்டோ பார்த்தால் அப்படி தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவங்களுடைய portion நிறைவும் அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.