இன்னும் அப்படியே இருக்கிறாரே! என்ன அழகுடா. கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா, ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திவ்யா, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பள்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
பின்னர் இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.
இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படமான பைவ் ஸ்டாரிலும் பாடல் பாடியிருக்கிறார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
இடையில் திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து சிறிது நாட்கள் ஒதுங்கியிருந்தார். தற்பொழுது மீண்டும் திரைத்துறையில் வர முயற்சித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிகிறது.