என்ன மனுஷன் யா.. அந்த மனசுக்காகவே நீங்க ஜெயிப்பீங்க கார்த்தி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் எப்போதுமே போட்டி என்று இருக்கு. ரஜினி -கமல், விஜய் - அஜித், சூர்யா - விக்ரம், தனுஷ் - சிம்பு. இந்த மாதிரி சண்டைகள் எல்லாம் எப்போவுமே ஓயாது. எல்லா ரசிகர்களுக்கும் எப்போதுமே அவங்களுக்கு பிடிச்ச நட்சத்திரம் உச்சத்தில் இருக்கவேண்டும் என்று தான் நினைப்பர். அப்படி அடுத்த ஜெனெரேஷன் சூப்பர்ஸ்டாராக உருவாகி வருபவர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது நடிக்கும் ஒவ்வொரு படங்களையும், பார்த்து பார்த்து செலக்ட் செய்து வருகிறார்.
கார்த்திக்கு போட்டியே இல்லை. அவரெல்லாம் ரொம்ப unique , எல்லா ரசிகர்களும் அவர் படத்தை பார்த்து ரசிப்பர். அப்படி அமைவதெல்லாம் கிப்ட்டு. அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு versatile நடிகர். அவர் எதாவது ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் என்றால், அது தன்வகைப்படுத்தி அந்த கதாபாத்திரம் இப்டித்தாண்டா இருக்கும் என்று நம் கண் முன் நிறுத்துவதில் வல்லவர்.
மேலும், அவருக்கு முன்னர் கைதி தீபாவளி ரிலீஸ் ஆனது பெரிய ஹிட் அடித்தது. தற்போது சர்தார். நேற்று தான் ட்ரைலர் ரிலீஸ் அனைத்து, படம் வேற லெவெலில் இருக்கும் என்று தோன்றுகிறது. பல கெட்டப்களில் தோன்றுகிறார். ஒருவரே பல கதாபாத்திரமா இல்லை டபுள், ட்ரிபிள் action படமா என்று கணிக்கவேமுடியவில்லை. கணிக்கமுடிந்தால் படம் பார்க்கும்போது நமக்கு எந்த ஒரு surprise-உம இருக்காது. அப்படி ட்ரைலரை வெட்டிய படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
நேற்று நடந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில், சிவகார்த்தியேன் நடித்த பிரின்ஸ் படமும் வருது, அந்த படமும் நல்லா ஓடணும், ரெண்டு படமும் எல்லாரும் போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று கார்த்தி சொன்னது அனைவரையும் கவர்ந்துள்ளது.
Video:
#Sardar star @Karthi_Offl also wishes @Siva_Kartikeyan’s #Prince a grand success . Good positive approach 👌👌pic.twitter.com/6uyRjQg5kG
— Rajasekar (@sekartweets) October 14, 2022