இதை போய் டெலீட் பண்ணிட்டீங்களேடா.. பொன்னியின் செல்வன் பொன்னி நதி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
பொன்னி நதி பாடலை திரையரங்கில் பார்த்த போது மெய் சிலிர்த்து போனேன் என்று சொல்வது சாதாரணம் இல்லை என்று சொன்னால் தான் ஆச்சர்யம். அப்படி இருந்தது அந்த பாடல் பெரிய திரையில் பார்க்கும்போது.
சோழரின் பெருமை மட்டும் அல்ல.. நம் தமிழரின் பெருமை - பொன்னியின் செல்வன். இந்த மாபெரும் காவியத்தை படைத்து தமிழரின் பெருமையை நமக்கு அறிவித்த கல்கி அவர்களுக்கு இந்த படத்தின் வெற்றியே சமர்ப்பணம். அதுமட்டுமில்லாமல் இந்த காவியத்தை படைத்த கல்கி அவர்களின் அறக்கட்டளைக்கு தயாரிப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து 1 கோடி ருபாய் கொடுத்தது மகிழ்ச்சி.
மணிரத்னம் சார் செய்த மிகப்பெரிய முயற்சி, அனைத்து கதாபாத்திரங்களையும் நம் கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்து விட்டார். நாம் ஒத்தகத்தில் பார்த்த கதாபாத்திரங்களை எல்லாம் பார்க்க முடியுமா திரையில் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். இனி இந்த காவியத்தை படிக்கும் அனைவருக்கும் கற்பனை கதாநாயகர்களாக படத்தில் வருபவர்களே காட்சியளிப்பார்கள்.
இந்த மாதிரி படத்திற்கு ரகுமான் எல்லாம் செட் அகமாட்டார் என்ற பேச்சு முதல் சிங்கிளாக பொன்னி நதி வந்தவுடனே மறைந்து போனது. ARR-இன் இசை இப்பபடத்தின் வெற்றிக்கு ஒரு முழு பங்கீடாகவே அமைந்தது. திரையரங்கில் இருந்து வெளிவந்தும் இன்று வரை, நம் மனதில் ஓடி கொண்டே இருந்தது என்றால் மிகையாகாது. அது தான் ரகுமானின் இசை. மிரட்டி விட்டிருக்கிறார்.
ஒரே வார்த்தையில் படம் எப்படி என்று சொல்லிவிட முடியாது, கதை வாசித்த அனைவருக்கும் இப்படம் ஒரு காவியாமகவே அமைந்தது படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் பொன்னியின் செல்வன் /ரசிகர்கள்/ரசிகைகளில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஏப்ரல் மதம் இதன் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இன்று வெளியான இந்த பாடலில் நிறைய காட்சிகள் பெரிய திரையில் டெலீட் செய்யப்பட்டது. பாடல் பார்க்கும்போது “அதையேன் டெலீட் செஞ்சீங்க என்று கடுப்பாகிறது..”
இறுதி வார்த்தைகள்: “நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் இந்த பாடல் இன்னும் என் இதயத்தில் ஒலிக்கிறது..”
Video: