வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.. கார்த்தியின் மிரட்டல் லுக்கை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர்..போட்டோ வைரல்..!
செப்டம்பர் 30 தமிழ் சினிமாவின் முக்கியமான படம் பொன்னியின் செல்வன் வெளியாகிறது. அதை முன்னிட்டு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.
நேற்று:
பாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசி ஆதித்த கரிகாலன்.
”ஆதித்ய” கரிகாலன் அல்ல, அல்ல, அல்ல!
தித்தன்= உறையூர்ச் சோழக் குடி!
சங்கத் தமிழிலேயே, தித்தன்!
மாவண் ”தித்தன்” வெண்ணெல்- புற400
ஆ+தித்தன்= ஆதித்தன்
*ஆ= ஆக்குதல்
*தித்தன்= குடிப்பெயர்
ஆக்கம் மிக்க சோழ இளவல்= ஆதித்தன்!.
இன்று:
ஆடித் திங்கள் 18ம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.
Karthi’s Tweet: