சர்தார் கெட்டப்பில் ரித்து செம்ம க்யூட். கார்த்தி மாஸ். வீடியோ செம்ம வைரலா போய்ட்டு இருக்கு.
தண்ணீரை வைத்து ஊழல் செய்ய நினைக்கும் அரசியல் வாதிகளுக்கும், கார்பரேட் முதலாளிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நல்ல திரைப்படம் " சர்தார்". படம் பாத்துட்டு 10,20 ரூ வாட்டர் பாட்டில் வாங்கவே தயக்கமா இருக்கு.
சர்தார் ஒரு தரமான படைப்பு. தண்ணீர் நெகிழி குடுவை பற்றி படம் கூறிய கருத்தை உணர்ந்த தருணத்தில், எனது தண்ணீர் சுமக்கும் நெகிழி குடுவையை அப்புற படுத்தி விட்டேன் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இயக்குனர் மித்ரன்க்கு இன்னொருமுறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம். சர்தார் 2 என்ன கதையை பற்றி சொல்ல இருக்கிறதோ, இப்போவே பெரிய hype படத்தை சுற்றி உருவாய்ட்டு இருக்கு. அது படத்துக்கு நல்லது.
இன்னும் நாம் எச்சரிக்கையா இல்லாமல் இருந்து விட்டால் கூடிய விரைவில் மாபெரும் தனியார் முதலாளிகள் எந்த விலையை நிர்ணயிக்கிறார்களோ அதுதான் தண்ணீரின் விலை என்ற நிலை கண்டிப்பாக தமிழ்நாட்டில் வரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க தண்ணீருக்காக தான் அடுத்த உலகப்போர் வரும் என்று சொல்லப்படுகிறது .சர்தார்” படம் இல்லை; இது நமக்கு ஒரு பாடம் என்று சீமான் பாராட்டு. இவர் தண்ணியை மையமாக வைத்து வெளிவந்த கத்தி படத்துக்கும் ஆதரவை கொடுத்திருந்தார்.
தற்போது அந்த படத்தில் சின்ன பையனாக நடித்த ரித்து சர்தார் படம் ஆஹா தலத்தில் வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்கார். அந்த வீடியோவில் ரித்து சர்தார் கெட்டப்பில் இருக்காரு, போலீஸ் கெட்டப்பிலும் இருக்காரு. மேலும் கார்த்தியே அந்த குட்டி ப்ரோமோவில் நடித்தது செம்ம. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி படத்தில் நல்லா இருந்தது.
Video: