சர்தார் ஸ்பெஷல்.. லைலா இப்போ கூட ஹீரோயின்னா நடிக்கலாம் போல. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கார்த்தி மக்களின் பேரன்பை பெற்றுவிட்டார். தற்போது மீண்டும் இந்த மாத இறுதியில் மக்கள் மனதை சர்தார் படம் மூலம் கொள்ளையடிக்க வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஏகப்பட்ட ரோல்கள், அதாவது ஆறு கதாபாத்திரம். இந்த கதை எப்படி விக்ரமிடம் போகலாம் இருந்தது என்று தானே யோசிக்கிறீங்க? தெரியுது.
சர்தார் இந்தக் கதைக்குள் நுழைந்து, நன்கு ஆராய்ந்து, தரமாக நடிக்க வேண்டிய பொறுப்பு கார்த்திக்கு இருந்தது. அதைத் திறம்படச் செய்தார். இதில் வயதான கார்த்தியும் அப்பாவாக வருகிறார். சர்தார் என்பது பெர்ஷிய மொழி வார்த்தையாம். அதற்கு ‘படைத்தலைவன்’ என்று பொருள் என்று இயக்குனர் மித்திரன் கூறுகிறார். இவர் ஏற்கனவே எடுத்த இரும்புத்திரை, ஹீரோ படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் படங்கள் எப்போதுமே ரொம்ப டெக்னிக்கலாக இருக்கும். மக்களுக்கு அவர் படம் மூலம் ஏதாவது எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே தான் இருப்பார். அதேபோல் இந்த படமும் முக்கியமான விஷயத்தை டீல் செய்கிறது. படத்தில் உளவு தான் கான்செப்ட். முந்தைய காலத்தில் நடந்த ஒரு விஷயம் எப்படி நிகழ்காலம் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மிகவும் நேர்த்தியாக லாஜிக் லூப்ஹோல்ஸ் இல்லாமல் சொல்லிருக்கின்றனராம்.
ஏற்கனவே கார்த்தி போலீஸ் வேடத்தில் எல்லாம் நடித்திருந்தால், இந்த படகில் அது மாதிரி சாயல் இருக்கக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்துள்ளாராம். படம் அடுத்து என்ன நடக்கும், நடக்கும் என்று கடைசி வரை திரைக்கதை விறுவிறுப்பாக போகும் என்றும் சொல்கிறார். இந்த படகில் நாம் சின்ன வயதில் மிகவும் ரசித்த குறும்புத்தனமான நடிகை லைலா comeback கொடுத்துள்ளார்.
தீபாவளியன்று ஜெயிக்கப்போவது கார்த்தியா? சிவகார்திகேயனா?