அப்புறம் என்னப்பா தீபாவளி வின்னர் சர்தார் தான். கார்த்தி சும்மா மிரட்டி விட்டிருக்காரு. சர்தார் ரிவியூ.
இந்த படம் ஹிட் ஆனதுக்கு கார்த்தியின் கதாபாத்திரம் அவ்வளவு ஸ்ட்ராங் என்றாலும், பின்னாடி ஒர்க் செய்த இயக்குனருக்கு கார்த்திக்கு எந்தளவு பாராட்டு வருகிறதோ, அந்தளவு இயக்குனருக்கும் வரவேண்டும், நல்ல ஒரு தரமான படைப்பு. இந்த படத்துக்கு முன்னாடி எவ்வளவு research பண்ணிருப்பார் அப்டின்னு நினைத்தாலே அது வேற லெவல். இவர் அடுத்து பண்ண போகிறார் என்ற எதிர்பார்ப்பு அப்படி எகிறி இருக்கு. இந்த படத்தில் அவ்வளவு டீடைலிங், இது தான் பீஸ்ட் போன்ற படத்தில் மிஸ் பண்ணது.
ஒரு சில படங்கள் நல்லாவே இல்லை என்றாலும் ஹீரோ நல்ல ஹார்ட் ஒர்க் பண்ணிருக்காரு, செம்ம டான்ஸ் பைட் ஒன் மேன் ஷோ என்ற விமர்சங்கள் எல்லாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் கார்த்திக்கு அவ்வளவு வேடங்கள், அனைத்திலும் பிரிச்சு மேய்கிறார். சில படங்கள் முதல் பாதி வேற லெவெலில் இருக்கு, இரண்டாம் பாதி அப்படியே பிளாட் ஆய்டும், கடைசியில் ஒரு ஆவெரேஜ் படம் பார்த்த பீலிங் இருக்கும். இந்த படமும் முதல் பாதி செம்மயா இருக்கு, பின்னர் இன்டெர்வல் நெருங்க நெருங்க சர்தார் என்ட்ரி BGM பட்டையை கிளப்பிருக்கு.
படத்தின் இரண்டாம் பாதி நெறய சோசியல் மெசேஜ் சொன்னாலும் அது எல்லாமே கேட்க புதுசா இருக்கு. Next டைம் வாட்டர் பாட்டில் பார்க்கும்போது எல்லாம் உங்களுக்கு அது தான் நியாபகத்துக்கு வரணும். படத்தில் எப்போவும் போல இரண்டு ஹீரோயின்கள் ராசி கண்ணா, ராஜீஷா விஜயன் இருவரையும் அந்த அளவுக்கு யூஸ் பண்ணல. ஆனா இவங்களை விட லைலாக்கு நிறைய screen ஸ்பேஸ் இருக்கு. ரித்து செம்ம க்யூட்டா நடிச்சிருக்கான். ஜி.வி.பிரகாஷ் இசை சில இடத்தில மிரட்டல், சில இடத்தில கொஞ்சம் சொதப்பல். பாட்டு எதுவும் மனசுல நிக்கல. இந்த படத்துக்கு பாட்டு தேவை இல்லைன்னு இயக்குனர் நினைச்சிருந்தா பாட்டே இல்லாமல் கூட படம் எடுத்திருக்கலாம். படம் இன்னும் கொஞ்சம் ஸ்பீட் ஆகி இருக்கும்.
மொத்தத்தில் கார்த்திக்கு இந்த வருடம் செம்ம வருடம், ரிலீசான மூன்று படமும் செம்ம ஹிட் வசூல் ரீதியாக. அடுத்தடுத்து இவரின் படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடுகிறது. இது வருக்கான நேரம் அடிச்சு தூக்கு.
PS. கதையை வெளிப்படையாக கூட எங்கயும் சொலல, காரணம் நீங்க எல்லாரும் பொய் பெரிய திரையில் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணனும் என்று. கண்டிப்பா ஒர்த் வாட்ச்.
Rating: 3.5/5