வந்தியத்தேவனுக்கு 'பெண்ணாசைல இருந்து பொன்னாசை' வரை எல்லா ஆசையும் உண்டு. கார்த்தி பேசிய வீடியோ ட்ரெண்டிங்.
ஆடித் திங்கள் 18ஆம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.
பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மெய்காப்பாளர் அதே நேரம் பொன்னியின் செல்வரிடம் பக்தி கொண்ட வீரன் இந்த வந்தியத்தேவன்..
இந்த வீரனால் ஆபத்து உதவிகளின் சதியை முறியடித்து, இந்த இரு சோழ இளவரசர்களின் உயிரையும் காப்பாற்ற முடிந்ததா? காலமுகரிடம் மதுராந்தகத் தேவன் சிக்கிக்கொண்டு சக்கரவர்த்தி பதவியை அடைந்தானா? சிவலோகப் பதவி அடைந்தானா?
இப்படி ஒரு இன்ட்ரோ கொடுக்காம நம்ம வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை justify பண்ணவே முடியாது.
பொன்னியின் செல்வன் படத்துல கார்த்தி தான் வந்தியத்தேவன். இவரை தவிர இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமா யார் பொருந்துவா?
அவருடைய பேச்சு வைரல்: