கும்முனா கும்மிருட்டு.. கொஞ்சுனா ஜல்லிக்கட்டு. சர்தார் முதல் சிங்கிள். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சர்தார் படம் வரும் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. முத முறையாக நடிகர் கார்த்தி பல வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான டீசரை பார்த்து மிரளாத ஆட்களே கிடையாது. அவ்வளவு மாஸாக இருந்தது. தீபாவளிக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது. இதை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல்.
அதுவும் இந்த படத்தில் flashback காட்சிகள் இடம் பெறுகிறது. அப்போது வரும் பாடல் இது. அந்த காட்சிகளில் தான் கர்ணன் படத்தில் நம் மனதை கொள்ளையடித்த ரஜிஷா விஜயன் நடிக்கிறார். மீண்டும் ஒரு தமிழ் படம், மீண்டும் ஒரு தரமான நடிப்பை வெளிப்படுத்த காத்திருக்கிறார். இது என்ன மாதிரி படம் முடியவில்லை சரி பாடலுக்கு வருவோம்.
அழகு தமிழில் இனிய தமிழில் பாடியுள்ள நடிகர் கார்த்தி அவர்களுக்கும் பாடலுக்கு உயிரோட்டம் அளித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும் பாடல் எழுதிய பாடலாசிரியர் யுகபாரதி அவர்களுக்கும் மிக்க மிக்க நன்றி. செந்தமிழ் வரிகளை கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
தமிழின் கலாச்சாரத்தையும் தொன்மையையும் நாகரீகத்தையும் உயர்த்தி பிடித்த ஒரு பாடல் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எங்க “தமிழ்” பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் “அழகு” தான். தமிழ் வரிகளை தமிழ் எழுத்துக்களிலே பதிவிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இப்போது வந்த சிங்கிள் எதிலும் தமிழ் வார்த்தைகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அதற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
கடைசியில் ஒரு பன்ச்: கேட்கவே இனிமையாக உள்ளது இந்தப்பாடல் தமிழ் = இனிப்பு ❤️அதுவே தனிச்சிறப்பு.
Video: